அழகு குறிப்புகள்மருத்துவம்

ஏழைகளின் ஆப்பிள்…?? தினமும் சாப்பிட இளமை திரும்பும்..!!

வைட்டமின் ‘சி’ உள்ள உயிர் சத்து, எந்த சூழ்நிலையிலும் சிதையாமல், நீண்ட நாள் அப்படியே பாதுகாக்கும். இதை நேரிடையாக உட்கொள்வதால் அதன் முழுபயனை அடைய முடியும். சிலேத்துமம்(கபம்), வாதம், பித்தம் ஆகிய மூன்றும் சமப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இதை ஏழைகளின் ஆப்பிள் என்று நெல்லிக்காயை குறிப்பிடலாம்..

ஏழைகளின் ஆப்பிள்

பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கம், காமாலையை தடுத்து விடும். ரத்தம் சுத்தமாகி, உடல் வலிமை பெறலாம். அதிகப் படியான உடல்சூட்டை தணித்து, குளிர்ச்சியை தர வல்லது. இன்றைய உலகில் எண்ணெய், மசாலா பொருட்களை சேர்ப்பது அத்தியாவசியம் ஆகிவிட்டது. நெல்லி தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் உள் உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றி, சுத்தமாக வைக்க உதவும்.

பெண்கள் இதை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் கருப்பை கோளாறுகள் அனைத்தும் சீர் செய்யப்படும். செல்கள் முதுமை அடைவதை தள்ளி வைக்கும் குணம் பெற்றது. வைட்டமின் சி சத்து குறைவால் ஏற்படும் ஸ்கர்வி எனும் நோயால் எலும்பு வலுவிழந்து காணப்படுதல், ஈறுகளில் ரத்த கசிவு, பற்கள் சொத்தையாவது, நகங்கள் வெண்மை அடைதல் இதற்கு மிகுந்த நிவாரணியாக விளங்கும்.

ரத்தத்தால் குறைவால் ஏற்படும் அனைத்து வியாதியை குணப்படுத்தும். நெல்லி இலையை ஊற விட்டு கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண் நோய்கள் தீரும். நெல்லியை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர கண்கள் குளிர்ச்சியாகும். நெல்லிச்சாறை தேனுடன் கலந்து காலை, மாலை குடித்து வர கண்புரை நோய், கண்பார்வை கோளாறு நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தை வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வர நோயின்றி இளமையுடன் வாழலாம்.

காயகற்பம்

உடலில் உள்ள நோய் பிணியை நீக்கி, ஆயுளை நீடிக்கும் தன்மை, நெல்லுக்கு உண்டு. அந்தளவுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நெல்லியில் உள்ளது. இதை காயகற்பம் என்று பெருமையுடன் அழைப்பர். இதை அடிக்கடி உட்கொள்வதால் நரை, திரை, மூப்பு போன்ற மரணத்தை வென்று விடுவான் மனிதன் என்று சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு நெல்லியில் ஒரு ஆரஞ்சு பழத்திற்கான சத்து நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லி அருநெல்லி, பெருநெல்லி என்று இரு வகைப்படும். அருநெல்லி சிறிதாக இருக்கும் இதை அதிகம் சாப்பிட ஜலதோஷம் பிடித்து தும்மல், இருமல் உண்டாகி விடும். பெருநெல்லி பெரிதாக காணப்படும். இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. பெருநெல்லி இலை, பூ, கனி பட்டை, வேர் அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படுகிறது. இம்மரத்தின் நிழலில் நின்றாலே பல நோய்கள் குணமாகும்.

நம் முன்னோர்கள் இதை போதிய அளவு உணவில் சேர்த்து வந்தனர். வயோதிக காலத்திலும் தங்களின் இளமையை கட்டுக்குள் வைத்து இருந்தனர். நெல்லியை பல்வேறு முறைகளில் பயன்படுத்தினால், நம் சரீரத்தை எப்போதும் ஆரோக்கியமாக இளமையாக வைத்து கொள்ள முடியும் அல்லவா..

மேலும் படிக்க

சிற்றரத்தை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *