ஃபேசன்அழகு குறிப்புகள்யூடியூபெர்ஸ்

Glow Skin tips : 5 நிமிடத்தில் சருமம் தங்கம் போல் மின்ன இதை பண்ணுங்க !!!!

நாம் அனைவரும் நம்மை பொலிவு படுத்தி அழகாக்கி காட்டுவதில் அதிக அக்கறை காட்டுகின்றோம். இந்த எந்திர உலகில் நம்மை நாம் அழகுபடுத்திக் கொள்வதற்கு என்று தனி முக்கியத்துவம் ஆனது கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் நாம் மிகச் சிறிய நேரத்தில் நம்மை நாம் எப்படி பொலிவுப் படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொலிவான சருமத்திற்கு ஈசியான டிப்ஸ்

ஸ்கின் க்ளோ என்பது அனைவருக்கும் முக்கியமானது. அதற்காக நாம் ஆயிரக்கணக்கில் செலவும் செய்கின்றோம். இதை எளிதில் வீட்டில் செய்பவர்களும் உண்டு. சிலருக்கு அது எளிதில் பயன் தரும். பலருக்கு அது பயன் தராமலும் போகும்.

சர்மம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது, யார் என்ன நிறத்தில் இருந்தாலும் அவர்களுடைய தோலின் பொலிவு தன்மை என்பது முக்கியமாக இன்று பேசப்படும் பொருளாக இருக்கின்றது.

பெண்களிடையே ‘உன் ஸ்கின் ரொம்ப பளிச்சுனு இருக்கு எனக்கு ஒரு டிப்ஸ் குடுங்க’ அப்படிங்கற பேச்சானது அடிபட்ட வண்ணமே இருக்கும். நம் நாமும் பல டிப்ஸ்கள் பயன்படுத்தியிருப்போம் அதில் ஒன்று கூட கை கூடி இருக்காது. க்ரீம்களை விட எளிதில் நம்மை நாம் பொழிவுபடுத்திக் கொள்ள சில டிப்ஸ்கள் இங்கு கொடுத்துள்ளோம் அதனை பயன்படுத்தி வாருங்கள்.

வீட்டிலேயே எளிதாக பண்ணலாம் ஸ்கின் க்ளோ

சின்னதா பங்ஷனுக்கு கிளம்பனும் இப்ப போய் ஃபேசியல் பண்ண நேரம் இல்லையே என்று யோசிப்பவரா நீங்கள் அப்படி எனில் உங்களுக்கான டிப்ஸ் தான் இது…

  1. உங்கள் வீட்டில் பச்சை பால் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் ஒத்தி முகத்தில் வைத்து எடுக்கவும். பால் மற்றும் பன்னீர் முகத்தில் வைத்து எடுக்கும் போது அந்த நீர்த்த தன்மையானது ஸ்கின்னில் படிந்து ஒரு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நேரில் வெறுமனே கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீக்கப்படும். முகத்தில் உடனடியாக பொலிவு மற்றும் புத்துணர்ச்சி என்பது நீண்ட நேரம் இருக்கும்
  2. தக்காளி சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இதன் மூலம் இயற்கையான பொலிவினை உடனடியாக பெறலாம். இதுவும் சருமத்தை புதுமையுடன் காட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *