வடகிழக்கு பருவமழை தீவிரமெடுகின்றது
வடகிழக்கு பருவமழையானது தீவிரமாகப் பெய்து வருகின்றது. சென்னை பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.சென்னை பகுதியில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமாகப் பெய்யும் என்று தகவல்கள் கிடைத்து வருகின்றது.
- வடக்கிழக்கு பழவமழையானது தீவிரமாகி இந்தியாவில் தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து இருக்கின்றது.
- இந்தியாவின் வடக்கிழக்கு பருவமழைக் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழையானது பெய்யும்.
- சென்னையில் பெய்து வரும் கனமழை சுற்றுப்புற மாவட்டங்களிலும் இன்னும் அதிகரிக்கும்.
சென்னப்பகுதியில் மழை
சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
வடக்கிழக்குப் பருவமழை மொபைலில் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை என்பது தீவிரமாகப் பெய்யும் என்பதால் சென்னை பகுதியில் மழை காரணமாகவும் கோவித்-19 காரணமாகவும் மக்களுக்கு அரசு தனியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மொபைல் செய்திகள் மூலமாக அறிவித்து வருகின்றது.
அடையாற்றில் வெள்ளம்
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ராயபுரம், பெருங்குடி, நீலாங்கரை சிதலபாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை நேற்று இரவு பெய்தது பலத்த மழை காரணமாக அடையாற்றில் நீர் வெள்ளமாக பாய்ந்து வருகின்றது.
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மதுரை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் கடலூர் மாவட்டங்களில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கின்றது. சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி 21 அடியை தாண்டி இந்த இருந்துவருகின்றது. கடலூர், நாகை, காரைக்கால் பகுதிகளில் மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பாதுகாப்பாக இருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆனது தீவிரமாகப் பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது