சமையல் குறிப்புவாழ்க்கை முறை

வெயிலை மிஸ் பண்ணாதீங்க.. அப்பறம் பீல் பண்ணுவீங்க..!!

பருவ காலங்களில் செய்ய கூடிய அந்தந்த வேலைகளை செய்வதால் நமக்கு பல நன்மைகள் அடங்கி உள்ளன. இதை முன்னோர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்து கொள்ள, ஏற்ற காலமாகவே இந்த கோடை கத்தரி வெயிலை பயன்படுத்தி கொண்டனர். இன்னும் ஒரு வாரமே தொடரும் இந்த வெயிலை நீங்களும் பயனுள்ளதாக மாற்றி கொள்ளுங்க.

அரிசி வடகம் : புழுங்கலரிசியை 2 டம்ளர் அளவு எடுத்து, ஒரு மூன்று மணி நேரம் கழுவி ஊற வைங்க. நல்ல ஊற வைத்த பிறகு கிரைண்டரில் போட்டு, மைய அரைத்து எடுத்து வச்சுக்கோங்க. அந்த மாவில் ரெண்டு மடங்கு தண்ணி ஊற்றி, நல்லா கலக்கி அடுப்பில வச்சு கிளறிக்கொண்டே இருந்தீங்கன்னா.. களி பதத்தில் மாவு வெந்த பதம் வர வரைக்கும், அந்த அளவுக்கு வேக வச்சுக்கோங்க.

தண்ணியை தொட்ட கையால் தொட கையில் ஒட்டக் கூடாது. அது தான் வெந்த பதம். அதில் சீரகம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கலக்கி கொதிக்க வைக்கும் போதே போட்டுடுங்க. பச்சை மிளகாயை போட்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கலந்துக்கலாம். இந்த மாவை முறுக்கு அச்சில், உங்களுக்கு என்ன டிசைன் தேவையோ, அந்த அட்சியில் பிழிந்து, மூன்று நாட்களுக்கு வெயிலில் நல்ல காய வைத்து, எடுத்து ஒரு டப்பாவில் ஸ்டோர் பண்ணி வச்சிக்கோங்க.

மழைக் காலங்களில்

மழைக் காலங்களில் புளி குழம்பு, காரக் குழம்பு, வைக்கும் போது இந்த வடகம் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். காய்கறிகள் விலை ஏறினால், அப்போ இந்தப் வடகத்தை பொறித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சாப்பாட்டுடன் சாப்பிட சேர்த்து சாப்பிடுவாங்க. இது காசு கொடுத்து கடையில வாங்கணும்னு அவசியம் இல்லை.

இது ஈஸியாக செய்யலாம். முதல் தடவை செய்றவங்க அளவு ஒரு டம்ளர் அரிசிக்கு மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. ஈஸியா இருந்தா, அடுத்த தடவை அளவை கூட்டி கூட செஞ்சு பாருங்க. வெயில் காலத்தில் தான் இந்த வடகத்தை செய்ய முடியும். முயற்சி செஞ்சு பாருங்க.

வத்தல்

 இதே போன்று ஜவ்வரிசி வடகம், ஊற வைத்து அரைத்து வேக விட்டு செய்வது அரிசி வடகம் போலவே செய்யலாம். பச்சைமிளகாய் வத்தல், மாங்காய் வத்தல், பாகற்காய் வத்தல், சுண்ட வத்தல் இது ஒவ்வன்றும்ப பிரஷா கடையில் வாங்கி வந்து கழுவி புளித்த தயிரில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுத்து வெயிலில் ஒரு வாரம் காய வைத்து எடுத்தால் தயாராகி விடும். வத்தல் பொரித்தால் பழைய சோறு, தயிர் சோறு, புளி குழம்பிற்கு தொட்டுக்க ருசியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *