செல்லப்பிராணி செய்ததை நீங்களே பாருங்க அதிர்ச்சியில் உரிமையாளர்
ஐல் ஆஃப் மேன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்லின் ஹார்ன். இவர் தனது படுக்கையின் ஓரத்தில் சிறிய பானை ஒன்றை வைத்து அதில் பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது செல்லப் பிராணியான பெக்கி சமீபத்தில் அந்த பானைக்குள் இருந்த அனைத்தையும் எடுத்து சாப்பிட்டு இருக்கிறது என்று தெரியவந்தது. ஜோஸ்லின் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இவரது கணவர் ஆலன் பணத்தை பற்றிக் கூறியிருக்கிறார். ஆனால் விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்து முதலில் நம்பவில்லை. ஆனால் கிழிந்த 20 நோட்டை கண்டதும் அந்த நம்பிக்கை போய்விட்டது. இதை தவிர வேறு துண்டுகள் எதுவும் கண்ணில் படவில்லை.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெக்கி மறுநாள் மென்று விழுங்கிய பணம் அனைத்தையும் வெளியே கக்கி விட்டதாக கூறியிருக்கிறார். இவற்றை கழுவி வரிசை எண்களை கண்டுபிடிக்க முடிந்தால் பணத்தை திரும்ப பெறலாம் என நினைத்துள்ளார். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய் விட்டதாக கூறுகிறார்.
பெக்கிக்கு பார்க்கும் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிடும் பழக்கம் இருப்பதாகவும், எங்கு சென்றாலும் கூடவே வருவதாகவும் கூறுகிறார். மேலும் பெக்கிடம் இருந்து பொருட்களை காப்பாற்ற படுக்கையறையை எப்போதும் மூடி வைத்திருப்பாராம். அதையும் மீறி பெக்கி உள்ளே சென்று சேமிப்பு பணத்தை நாசமாக்கி விட்டன.
இதைப் பார்த்து சிரிக்க வேண்டுமா? அழ வேண்டுமா? என்று கூட தெரியவில்லை எனக்கு. பெக்கியை மிகவும் பிடிக்கும். அதற்காக என்னுடைய 100 டாலரை விழுந்து விட்டான் என்று பரிதாபமாகக் கூறுகிறார்.
விசுவாசம் மிகுந்த குறும்புத்தனம் மிக்க செல்லப்பிராணிகள் நாய்கள் சில நேரங்களில் பல சேதங்களை கூட வரவழைத்துவிடும். எதைப் பார்த்தாலும் எடுத்து சாப்பிடக்கூடிய நாய்க்குட்டி ஒன்று தனது முதலாளியின் சுமார் 100 டாலரை எடுத்து சாப்பிட்டது என்னவென்று சொல்வது. புலி பசி எடுத்தால் புல்லை திங்கும் என்பார்கள் அது இதுதானோ..