வலுவான அழகிய நகங்களை பெற.. இத ஃபாலோ பண்ணுங்க!
நம் உடலில் உள்ள பிரச்சனைகளை நம் அக அழகு காட்டிக் கொடுக்கும். நம் நகங்களை வைத்து நம் உடலின் ஆரோக்கியத்தை எடை போடலாம். சில நேரங்களில் அடிக்கடி நகங்கள் உடைந்து போகும். எவ்வளவு கவனமாக நகங்களை வளர்த்தாலும் உடைந்து போவது எரிச்சலைத் தரும். வலுவான அழகிய நகங்களை பெற.
- நகங்களை வைத்து நம் உடலின் ஆரோக்கியத்தை எடை போடலாம்.
- வலுவான அழகிய நகங்களை பெற.
- நகங்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து வலுவாக்க.
நகத்தை கடிப்பதை தவிர்க்க
சில நேரங்களில் அது தற்செயலாக நடக்கலாம். தொடர்ந்து அடிக்கடி நகங்கள் விழுவது நிகழ்ந்தால் பிரச்சனைதான். அடிக்கடி நகத்தை கடிப்பதை தவிர்க்க வேண்டும். நகங்களின் நலனுக்காக தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது நகங்களுக்கு தேய்த்து சிறிது மசாஜ் செய்து விட வேண்டும்.
மாய்ஸ்சரைசர்
கியூடிகல் ஆயில் வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. நகங்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து வலுவாக்கும். கைகளை கழுவும் போது நகங்களையும் மாய்ஸ்சரைசர் செய்ய வேண்டும். கைகளுக்கு கையுறை அணிந்து கொள்வதால் நகங்கள் உடைவதை தவிர்க்கலாம்.
நகப்பூச்சு
நீண்ட நேரம் தண்ணீரில் கைகளை வைக்காமல் இருக்க இந்த கையுறை பயன்படும். நகப்பூச்சு அடிக்கடி பூசாமல் இருப்பது நல்லது. நகங்களை பாதிப்பது, ரத்தக் கசிவு மற்றும் வலியை ஏற்படாமலிருக்க நகங்களை அடிக்கடி கடிப்பதை தவிர்க்க வேண்டும்.