மருத்துவம்

கொசுக்களிடமிருந்து நம்மை காக்க எளிய வழிமுறைகள்!

பருவ மாற்றங்கள் காரணமாக  மழைக் காலம் மற்றும் பனிகாலங்களில் வீட்டைச்  சுற்றி வளரும் புல்வெளிகளில் பூச்சி மற்றும் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் முதல்  பெரியோர்கள் வரை இன்னல்கள் அனுபவித்து வருகின்றனர்.

சந்தையில் கொசு மற்றும் பூச்சி விரட்டிகள்  எண்ணிக்கையானது பெருகி வருகின்றது. அவை முழுவதும் கெமிக்கலின் ஆதிக்கம் கொண்டவை, மேலும் இவைகள் மக்களின் சுவாசப் பாதைகளை  பாதிக்கின்றது, மூச்சு திணரல் ஏற்படுத்துகின்றன.  இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி வீட்டுப் பொருட்களை வைத்து  நம்மை பாதுகாக்கலாம் என்பது குறித்து குறிப்புகள் தருகின்றோம் அதனை பின்ப்பற்றி சுற்றுப்புறம் வீட்டை காத்துக் கொள்ளவும். 

நீர் தேக்கத்தை முழுமையாக நீக்க வேண்டும்.


வீட்டைச்  சுற்றி, குப்பைகள் மற்றும் நீர் தேக்கத்தை முழுமையாக நீக்க வேண்டும்.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேம்பு, நொச்சி, கற்புரவல்லி, துளசி போன்றவற்றின் இலைகளை காயவைத்து தேங்காய் சுரட்டையில் வைத்து நெருப்பூட்டி புகைக்க வைக்க வீட்டைச் சுற்றியுள்ள கொசுக்கள் மறையும்.

வீட்டைச் சுற்றி கற்புரவல்லிச் செடி, நொச்சி செடி, துளசி, வேம்பு ஆகியவற்றை வளர்க்கலாம். இவை பூச்சி தொல்லைகளிருந்து நம்மை காப்பதுடன் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இவைகளை கொண்டு கொசுத் தடுப்பு வில்லைகளையும் உருவாக்கலாம்.


மாட்டுச் சாணத்தை நன்கு வறட்டிகளாக்கி அதனை  காலிப் பூந்தொட்டியிலிட்டு புகையை உண்டாக்கினாலும் கொசுக்கள் மறையும்.  கொசுக்கடியினால் உடலில் உண்டாகும் தடிப்புகளை போக்க  தேங்காய் எண்ணெயை தடவலாம்.  

ஐஸ்கட்டி ஒத்தனம் வைப்பதன் மூலமும் தடிப்பை பாக்கலாம். முறையை சிறிய குழந்தைகளுக்கு கூட செய்யலாம்.
கொசு கடித்து வீங்கி விட்டால் அப்போது வீட்டில் இருக்கும் வினிகரை இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீர் கலந்து ஒரு காட்டன் பஞ்சியால் நனைத்து அந்த பஞ்சை வீக்கங்கள் உள்ள இடத்தில் வைத்து சிறு நேரம் வரை ஒற்றி எடுக்கலாம், இது இவ்வாறு செய்தாலும் கொசு கடித்த வீக்கங்கள் சரியாகும்.

 குழந்தைக்கு கொசு கடித்து தடித்து விட்டால் அப்போது அந்த தடிப்பின் மீது தேன் வைத்து தடவினாலும் கொசு தடிப்புகள சில நேரங்களில் மறைந்து விடும். உங்கள் வீட்டில் டீத்தூள் பாக்கெட் இருந்தால் அவற்றை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். பின்பு அந்த பாக்கெட்டை கொசு கடித்த  இடத்தில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் கொசு கடித்த தடிப்புகள் மறைந்து விடும்.

கொசுவத்தியால் ஏற்படும் மூச்சுதிணரலில் இருந்து நம்மை காக்க  மாட்டுச் சாணத்துடன்,  நொச்சி இலை, துளசி இலை, வேப்பிலை, கற்ப்பூறவல்லி  இலைகளை அரைத்து சாணத்துடன் கலந்து வில்லைகளாக்கி வெய்யிலில் நன்கு உலர்த்தி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் உடலில் பாதுகாப்பு மற்றும் நச்சுத் தன்மையிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.  வில்லைகளை பற்ற வைத்தப் பின்  நாள் முழுவதும் வீட்டினுள் கொசு நுழையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *