அனுஷ்கா மாதிரி பொலிவு பெற இது தாங்க பெஸ்ட்..!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உங்க முகத்துல முகப்பரு, கொப்பளங்கள் வந்து உங்கள் அழகை கெடுக்கிறதா? இத செய்யுங்க. உங்க முகம் பளபளக்கும். பன்னீர், எலுமிச்சை பழச் சாறையும் சம அளவில் கலந்து முகத்துக்கு பூசுங்க அரை மணி நேரம் நன்றாக காயவிட்டு பிறகு முகத்தை வாஸ் பண்ணுங்க.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை தவிர்க்க
முகப்பருவை போக்க காய்ந்த ஆரஞ்சு தோல்களை பொடியாக்கி, அதில் சம அளவு கடலை மாவும், பன்னீரும் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காய வைத்து பிறகு மிதமான தண்ணீரில் கழுவவும்.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை தவிர்க்க, ஜாதிக்காய்த் தூளை பாலில் கலந்து, முகத்தில் பூசி காய்ந்த பின் மென்மையாக தேய்த்து பின் முகத்தை நீரில் கழுவவும்.
பருக்கள், சூட்டுக் கொப்புளங்கள் மீது சந்தனத் தூளைக் குழைத்து பூசினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். பூஜை அறையில் பயன்படுத்தும் சந்தன வில்லைகள் இதற்காக உபயோகிக்கலாம்.
அழகு சாதனங்களை
முகத்தில் முகப்பரு போக்கு உடையவர்கள் எண்ணெய் பசையுள்ள அழகு சாதனங்களை தவிர்த்திடுங்கள். கூந்தலுக்கு பயன்படுத்தும் ஜெல் ஸ்பிரே போன்றவற்றை தவிர்த்திடுங்கள். பருக்களை கில்லரது அல்லது அழுத்தி தேய்க்கவே கூடாது. சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்திற்கு தடவி வரதனால பொலிவுடனும் காணப்படும்.
தினசரி புதினா சாறு முகத்திற்கு தடவி வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும். முகம் வெண்ணிறம் பெற நான்கு பாதாம் பருப்புகளை ஊற வைத்து, பாலில் கலந்து அரைத்து, இரவு படுக்கும் முன்பு முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். காலையில் கழுவ முகம் பொலிவு பெரும். முகம் பொலிவு பெற மஞ்சத்தூள் சந்தனம் மற்றும் பாலாடை கலந்து பூசி கொள்ளலாம்.
தேவையற்ற முடிகளை தவிர்க்க
சமமான அளவில் மஞ்சள் தூள், கோதுமை மாவு, நல்லெண்ணெய் விழுதாக கலந்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை தவிர்க்கலாம். முகம் பளபளக்க பச்சை கேரட்டை விழுதாக அரைத்து, முகத்தில் தடவி ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவவும்.
சிறிது முட்டைகோசுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் வருவதை தவிர்க்கலாம். மென்மையான வளவளப்பான சருமத்திற்கு ஆரஞ்சு சாறு உபயோகிக்கலாம். சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நிறம் மாற, கடலை மாவுடன், தக்காளி சாறு கலந்து முகத்திற்கு பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
எண்ணெய் சுரப்பிகள்
கண்களை சுற்றி எண்ணெய் சுரப்பிகள் இல்லாதது மற்றும் நம் முக பாவனையும் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் வர வழிவகை செய்கின்றன. இதைத் தவிர்க்க ஒரு நல்ல ஈரத்தன்மை உள்ள க்ரீம் சிறிது சிறிய வயதிலிருந்தே உபயோகித்து கொண்டிருந்தால், அதிக சுருக்கங்களை தவிர்க்கலாம்.
உறுதியான இமைகள் பெற தினமும் இரவில் விளக்கெண்ணையை தடவினாள் இமைகள் நன்றாக வளம்பெறும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இதனால் சூட்டில் ஆலிவ் எண்ணெய்யை வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை தடவி வர அடர்த்தியான புருவங்களும், நீளமான இமைகளும் பெறலாம்.