Diwali 2023 Special breakfast: தீபாவளி ஸ்பெஷல் டிபன்; வித்தியாசமான இந்த ரெசிபியை செஞ்சு அசத்துங்க
உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரப் போகிறது. தீபாவளி வர இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு இந்த தீபாவளி பண்டிகைக்கு என்ன பட்டாசு வாங்கலாம் எவ்வளவு விலைக்கு வாங்கலாம் புதுசா என்ன பட்டாசு வந்திருக்கு என்று யோசனை இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தீபாவளி பண்டிகை என்று எந்த கோவிலுக்கு செல்லலாம் எப்பொழுது செல்லலாம் என்று சிந்தனை இருக்கும்.
வீட்டில் உள்ள ஆண்களுக்கு இந்த வருடம் தீபாவளிக்கு அனைவருக்கும் புத்தாடை எடுக்க வேண்டும் தீபாவளையை முடிந்த அளவு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை இருக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வீட்டில் உள்ள பெண்களுக்கோ தீபாவளி வர போகுது காலையில் எழுந்ததும் சுவாமி கும்பிட்டு விட்டு பட்டாசு வெடித்து விட்டு ஆசையாக வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு சுவையான டிபன் செஞ்சு அசத்தனும் என்ற யோசனை இருக்கும். அவ்வாறு யோசித்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு ஒரு அருமையான டிபன் செய்வது எவ்வாறு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 1/2 கப்
மைதா மாவு – 1 கப்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தக்காளி பூரி செய்முறை
முதலில் நாம் எடுத்து வைத்த சீரகத்தூள், மிளகாய்த் தூள், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அரைத்ததை ஒரு வடிகட்டிகள் போட்டு வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் மைதா மாவில் சிறிதளவு மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மீதி உள்ள மைதா மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நாம் எடுத்து வைத்த ஒன்றரை கப் கோதுமை மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பிசைந்து வைத்த மாவு ஒரு அரை மணி நேரம் ஊறிய பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். அதன் பின்பு உருண்டை பிடித்த மாவை நாம் எடுத்து வைத்த மைதா மாவில் புரட்டி எடுத்து அதன் பின்பு வட்ட வடிவில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் நாம் தேய்த்து வைத்த பூரி மாவை போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சூடான சுவையான மிக மிக வித்தியாசமான தக்காளி பூரி ரெடி.
தீபாவளி பண்டிகை அன்று காலை நேர டிபன் ஆக இதை செய்து அசத்துங்கள் எப்பொழுதும் செய்யும் பூரியைக் காட்டிலும் இந்த தக்காளி பூரி தீபாவளி பண்டிகைக்கு ஏற்ற மிக வித்தியாசமான தீபாவளி ஸ்பெஷல் பூரியாக உங்கள் குடும்பத்தினருக்கு இருக்கும்.