வியாதிகள் வேகமாக பறக்க.. ராகியை விரும்பி சாப்பிடுங்க..!!
நாம் பொருளாதார முன்னேற்றதிகாகவும், பணத்திற்காக வும், ஓடி அலைந்தாலும், எப்பவும் சோர்வடையாம இருக்கனும். அதற்கு உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுதல் நலம் தானே. அரிசி, கோதுமையை விட ராகி சத்துமிக்கது. அதிக கால்சியம் உள்ளதால் எலும்புக்கு வலுசேர்க்கும். ராகியை முதலில் உண்ணும் போது மாதம் ஒரு முறை, பிறகு மாதம் இருமுறை பிறகு வாரம் ஒருமுறை என்று கொஞ்சம், கொஞ்சமாக இதன் உபயோகத்தை அதிக படுத்திக்கொள்ள வேண்டும். சாப்பிடும் அளவையும் இதே போன்று அதிகபடுத்தி கொள்ளலாம். பாலை விட ராகியை கால்சியம் அதிகம்.
எந்த வகையில் சாப்பிட்டாலும்
ராகியை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து வடிகட்டி கூலாக காய்ச்சி குடிப்பதால் இது அனைவர்க்கும் ஒத்து கொள்ளும் உணவாக மாறும். ஒவ்வாமை உடையவர் களுக்கு இது ஒத்து கொள்ளும். இந்த முறையை பயன்படுத்தி எட்டு மாத குழந்தைகள் முதல் வயதிருக்கும் இதை குடுக்கலாம். ராகியை புட்டு, ராகி சேமியா, ராகி களி, ராகி இடியாப்பம், ராகி பக்கோடா, ராகி கூழ், ராகி கார புட்டு, ராகி உளுந்து தோசை, ராகி இட்லி என எந்த வகையில் சாப்பிட்டாலும் இதன் முழு சத்து உடலுக்கு கிடைக்கும்.
இதில் உள்ள டாபடோபேன் என்னும், அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையை கட்டுபாட்டில் வைக்கும். சேதமடைந்த திசுவை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவும். லெசித்தின், மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலம் கல்லீரலில் உள்ள அதிக படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைத்து, உடலின் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கும் ராகி.
சுண்ணாம்பு சத்து
சிறுநீரககல் கோளாறு உள்ளவர்கள் குறைவாக உண்ணுதல் நலம். கோதுமை முதலான உணவு பொருட்களால் வாந்தி, பேதி உருவாகும். மாற்று உணவாக ராகியை உபயோகிக்கலாம். நூறு கிராம் ராகியை முன்னூறு மிலி கால்சியம் உள்ளது. இது குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்ற சத்தான உணவு. சுண்ணாம்பு சத்து மற்ற தானியங்களை விட இதில் அதிகம் உள்ளது.
இரும்பு சத்து
மேலும் இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிட்டு குணமடையலாம். நார்சத்து, குளூட்டன் இல்லாதது. தையமின், ரிபோபிளேவின் ஆகிய உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை கொண்டது. அரிசி விலை அதிகம், ராகி மலிவானது என்பது பலர் கருத்து. அதன் பலன்களையே நாம் பார்க்கவேண்டும். நம் முன்னோர்கள் நீண்ட நாள் வாழ்ந்ததற்கு அவர்கள் ராகி சாப்பிட்டது காரணமாகலாம்.