செய்திகள்தேசியம்

வைரவிழா கொண்டாடும் ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையும், வைர விழா கொண்டாட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் என்ற துவங்க இருக்கின்றது. பல்வேறு நாடுகள் அதிபர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை இந்தக் கொண்டாட்டத்தை முழுமையாக ஆன்லைனில் நடத்த இருக்கின்றது. கொரோனா காரணமாக ஆன்லைனில் இந்த விழாவை ஐக்கிய நாடுகள் சபை நடத்துகின்றது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் 193 நாடுகளின் அதிபர்கள் தலைவர்கள் பங்கேற்பார்கள் அனைத்து நாடுகளின் தலைவர்களும் பேசுவார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் 25 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பொதுச்சபையில் பல நாடுகளின் பேச்சுக்கள் நடைபெற இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உலகநாடுகளின் சவால்களை சரிசெய்து ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இரு கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.

கடந்த ஆண்டு இதுபோல் 80 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 119 நாடுகளின் தலைவர்கள் அதிபர்கள் பிரதமர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைவர்கள் அவர்களின் பேசும் நேரங்கள் முன்கூட்டியே பட்டியலிடப்பட்ட கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் அமெரிக்க அதிபர் நேரில் பங்கேற்கிறாரென தகவல்கள் கிடைக்கின்றன. பிரதமர் மோடி அவர்கள் செப்டம்பர் 26-ஆம் தேதி பேசயிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபைகளின் மிக சக்தி வாய்ந்த அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் இருக்கின்றது. இந்த பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா பெற வேண்டும் என்றும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது கூடிய விரைவில் அது நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக நாடுகளின் இந்த அமைதி பாதுகாப்பு முன்னேற்றம் ஆகியவை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது இன்று வைர விழா கொண்டாட்டத்தில் இருக்கின்றது வவாழ்த்துவோம் ஐக்கிய நாடுகள் சபைக்கு நன்றி தெரிவித்து வணங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *