வித்தியாசமான குழம்பு..!
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தினமும் என்ன குழம்பு வைக்கலாம்? என்று ஒரே குழப்பமாக இருக்கும். வாரம் ,வாரம் ஒரே குழம்பு வைத்து அலுத்திருப்பார்கள். ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்றால், வீட்டில் அனைவருக்கும் ஒரே குஷியாக இருக்கும். எந்த ஒரு குழம்பும் ரிப்பீட் ஆகாமல் வித விதமாக செய்யும் போது செய்பவர்களுக்கும், சமையலை உண்ணும் போதும் ஒரு தனி ருசி தான். தப்பாளம் குழம்பு ,வத்தல் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தப்பாளம் குழம்பு
தேவையான பொருட்கள் : வாழைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை தண்டு தலா ஒரு கப், மொச்சைக் கொட்டை அரை கப், மாங்காய் 1, தேங்காய் அரை மூடி, கூட்டு தூள் 4 ஸ்பூன், புளி, வடகம், பூண்டு ,பெருங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, எண்ணெய், உப்பு, கடுகு தேவையான அளவு.
செய்முறை : முதலில் காய்களை துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மொச்சைக் கொட்டையை தனியே வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை சின்னதாக கீரை வைத்து விடுங்கள். காய்களை, கூட்டு தூள், உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும், புளி கரைத்து ஊற்ற வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வடகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றவும். அத்துடன் தேங்காய், மாங்காய் அறிந்தும் போடலாம். நன்றாக கொதித்ததும் இறக்கி வைக்கவும். சுவையான தப்பாளம் குழம்பு தயார்.
வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள் : வற்றல்,புளி எலுமிச்சம்பழ அளவு, மல்லி பொடி 4 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், எண்ணெய் 2 கரண்டி, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.
தாளிக்க : கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா அரை ஸ்பூன்.
செய்முறை : புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, உப்பு என்னை தேவையான அளவு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குழம்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு போட்டு வெடிக்க விட்டு, வெங்காயம், தக்காளி, பூண்டு,வற்றல், மிளகாய் ஆகியவற்றை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி, கொதித்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.