சமையல் குறிப்புவாழ்க்கை முறை

வித்தியாசமான டேஸ்ட்டில் மக்ரோனி ரெசிபி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது இன்றைய ஃபேஷன் ஆகிவிட்டது. இதில் மேகி, நூடுல்ஸ், மேக்ரோனி, பீசா, பர்கர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் மேக்ரோனி சாப்பிடுவதற்கு வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணுவார்கள். மக்ரோனி சமைக்கும் போது நமக்கு பிடித்த காய்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மக்ரோனி ரெசிபியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

மக்ரோனி ரெசிபி

தேவையான பொருட்கள்

மக்ரோனி ரீபைன்ட் ஆயில் ஒரு குழிக்கரண்டி, கடுகு அரை ஸ்பூன், கறிவேப்பிலை 2 இணுக்கு, சிறிய வெங்காயம் தோலுரித்து 5, பச்சைமிளகாய் 2 கீறி வைக்கவும்.

பீன்ஸ், கேரட் ,காலிஃப்ளவர், உருளைக் கிழங்கு தலா 150 கிராம் கழுவி தேவையான ஷேப்பில் நறுக்கி வைக்கவும். உப்பு தேவையான அளவு. தண்ணீர் 4 கப், மசாலா தூள் ஒரு ஸ்பூன், மயோனைஸ் 4 ஸ்பூன், இஞ்சி,பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் 50 கிராம் உப்பு, மக்ரோனி இரண்டையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேகவிடுங்கள்.

ஐந்து நிமிடத்தில் மக்ரோனி வெந்ததும் நீரை வடித்து விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

பச்சை வாசனை போன பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி கடைசியாக மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, இரண்டு நிமிடம் காய் வேகும் வரை வதக்க வேண்டும்.

காய் நன்றாக வெந்ததும் பாஸ்தா இதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக கலந்த பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சேர்த்து கிளற வேண்டும்.

பிறகு மறுபடியும் ஒரு நிமிடம் குறைந்த தீயில் கெட்டியாகும் வரை சமைத்து இதனுடன் சமைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சுவையான மக்ரோனி ரெசிபி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *