நவீன மனிதர்களும் நியாண்டர்தால் மனிதர்களும் ஒன்றாக வாழ்ந்தார்களா?
தெற்கு பிரான்சில் உள்ள ஒரு குகையில் புதிய புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் பல் மற்றும் கல்லால் செய்யப்பட்ட கருவிகள் அங்குக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மேற்கு ஐரோப்பாவில் சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹோமோ சாபியன்ஸ் (நவீன மனிதர்கள்) வாழ்ந்ததை இது நிரூபிப்பதாகவும்.. இரண்டு மனித இனங்களும் நீண்ட காலத்திற்கு ஒன்றாக இருந்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாகவும்”, The Science Advances Journal தெரிவித்துள்ளது.
தொன்மையான மனித இனங்கள் காணாமல் போனதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை கண்டறிய, இத்தகைய கண்டுபிடிப்புகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது
மேலும், “ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதர்கள் வந்த உடனேயே, நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்துவிட்டார்கள்”, என்கிற பிரபலமான கோட்பாட்டிற்கு சவால் விடும் வகையில் இந்த கண்டுபிடிப்பு இருப்பதாக, The Science Advances Journal கூறியுள்ளது.