விவசாயம் செய்யும் தோனி பிறந்த நாளுக்கு முன்பு கலைக்கட்டிய டிபி
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் வரும் ஜூலை 7ஆம் தேதி வருகின்றது. ஆனால் அதற்கு முன் அவரது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பொது டிபி வெளியிட்டுள்ளனர். மகேந்திர சிங் தோனியை கவுரவிக்கும் வகையில் இந்த டிபி அவருக்குப் பிடித்த சில அனைத்து தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன.
தோனிக்கு சிறுவயதில் கால்பந்து என்பது அடுத்த விளையாட்டாக இருந்தது மற்றும் பேட்மிண்டனில் அவர் ஆர்வமாக இருந்தது கால்பந்து அணியின் கோல் கீப்பராக கலக்கியது அத்துடன் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது காயத்தினால் கீப்பிங் செய்தது. போன்ற அவரது சிறுவயது நினைவுகள் அனைத்தும் அசைபோடும் அளவுக்கு அந்த டிபி சிறப்பாக அமைந்திருக்கின்றது.
ஹாப்பி பர்த்டே மஹேந்திரசிங் தோனி என்ற வாசகம் பொறித்த வந்தது தோனியின் 39வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஆனது களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த வருடம் 10 நாட்களுக்கு முன்பாக டிபி வெளியிடு செய்யப்பட்டுள்ளது.
இந்த டீபியில் சுஷாந்த் அவர்களும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் என அனைத்து தளங்களிலும் தோனியின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவானது கச்சை கட்ட தொடங்கிவிட்டது.
ரசிகர்கள் இந்த ஆண்டு தோனி பங்கேற்காததால் அவருடைய ஐபிஎல் போட்டியை பார்க்க ஆவலாக இருந்துள்ளனர் ஆனால் அதுவும் ஊரடங்கு காரணமாக தள்ளிப் போடப்பட்டது. என்னதான் ஊராடங்கு இருந்தாலும் நம்ம தலை மனைவி தோனியின் புது புது முயற்சிகளை எல்லாம் படம்பிடித்து நமக்கு கொடுக்கின்றார்.
அந்த வகையில் சமீபத்தில் விவசாயம் செய்ய களத்தில் தோனி இறங்கியுள்ளார். அவரே டிரேக்டரை இயக்கி அமர்ந்தவாரே நிலத்தை உழுவதைப் பார்க்கும்போது ஆவல் பெருகியது .இளைஞர்களுக்கு உற்சாகம் பொங்கியது. விவசாயத்தின் அருமையும் இளைஞர்களுக்கு இது புரியும் என்று தெரிந்தது. தோனி டிராக்டரை எடுத்து பண்ணை வீட்டு நிலத்தில் உழவு செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோ இன்று வைரலாகி வருகின்றது விவசாயமும் மக்கள் மனதில் மீண்டும் ஒரு வைரலாகும் என்று நம்பப்படுகின்றது.
பொறுப்புணர்வு பார்க்கையில் நமக்கும் ஆர்வம் பொங்குகின்றது எனலாம். லாக்டவுனில் நிம்மதியாக பொழுதை கழிப்பது நல்லது அதுவும் இயற்கை சார்ந்த பணிகள் செய்யும் பொழுது நம மனது மிகுந்த மகிழ்ச்சியுடன் செயல்படும்.