மகர விளக்கு தரிசனத்திற்கு ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளன. மேலும் ஜனவரி 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
மகர விளக்கு பூஜை
- மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளன.
- ஜனவரி 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
- ஆர்டிபிசி ஆர் பரிசோதனை செய்த ஜெராக்ஸ் சான்றிதழுடன் வரவேண்டும்.
ஆர்டிபிசி ஆர் பரிசோதனை
ஜனவரி 14 மகர விளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளன. தரிசனத்துக்கு வரும் ஒவ்வொருவரும் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் இருந்து ஆர்டிபிசி ஆர் பரிசோதனை செய்த ஜெராக்ஸ் சான்றிதழுடன் வரவேண்டும் என்பதை கட்டாயமாக்கபட்டுள்ளனர்.
கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி, தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு துவங்கி ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளன. மருத்துவம் உள்ளிட்ட வசதிகள், குடிநீர், உணவு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போன்றவை பக்தர்களுக்காக ஏற்பாடு மேற்கொண்டுள்ளன.