குரூப் 2 தேர்வு எழுத அறிவிக்கப்பட்ட தகுதிகள்!
குரூப் 2 தேர்வினை வெல்ல கனவுகளுடன் படிக்க தொடங்க நினைக்கும் தேர்வர்களுக்கு இந்த பதிவுகள் உதவிகரமாக இருக்கும். அரசு தேர்வுகளில் விண்ணப்பிக்க அடிப்படையானது அத்தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் ஆகும். அது குறித்து சரியான விளக்கங்கள் பலருக்கு இருப்பத்தில்லை ஆகையால இதனை முழுமையாக அறிந்து விண்ணப்பிக்க வேண்டியது அவசியனாகும்.
தகுதிகள் :
குருப் II தேர்வு தேர்வு எழுத தமிழக அரசு பணிவாரியம் நிர்ணயித்த வயது குறைந்தபடசம் 18 முதல் 21 வயது இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு சில குறைந்த பட்ச வயது குறிப்பிடப்படுள்ளது. அவையாவன
ஜூனியர் எம்பாள்ய்மெண்ட் ஆஃபிசர், கமர்சியல் டேக்ஸ் ஆஃபிசர் பதவிக்கு குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .
சப் ரெஜிஸ்டர் பதிவிக்கு குறைந்தபடச வயது 20 வயது அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் எம்பாளயிமெண்ட ஆஃபிசர் மற்றும் துணை கமர்சயல் ஆஃபிசர் வயதுகள் 18 முதல் 30 வயது வரை இருத்தலே தகுதியாகும் .
புரேபசன் ஆஃபிசர் வயது 22 முதல் 40 வரை இருக்கவேண்டும். துணை கமர்சியல் ஆஃபிசர் தகுதியானது 30 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். ஆனால் சட்டம் பயின்றவர்களுக்கு மட்டும் வயது தளர்த்தப்பட்டு 37 வயதாக தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் குரூப் II பொருத்த வரை பொதுவாக 40 வயது அதிகபட்ச வயதாகும்.
தேர்வானது மூன்று நிலைகளை கொண்டது முதன்மை,
முக்கியதேர்வு, நேரடித்தேர்வாகும்.
குரூப் 2 தேர்வின் மூன்று நிலைகளில் முக்கியமானது முதன்மை தேர்வாகும். இதனை முழுமையாக அறிந்து அனைவரும் படிக்க வேண்டியது முக்கியமாகும். முதன்மை தேர்வு கொள்குறி என அழைக்கப்படும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோர் முக்கிய தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேர்வு விளக்கவுரையில் எழுத வேண்டும். முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேரடி தேர்வில் வெற்றி பெறுவோர்கள் மதிபெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைக்கப்பட்டு மதிபெண்களுக்கு ஏற்ப பதவிகள் தேர்ந்தெடுத்து பயிர்சிக்கு அழைக்கப்பட்டு பணியில் அமர்த்தப் படுவார்கள்.