electionசெய்திகள்தமிழகம்தேசியம்

டெல்லி போராட்டம், எதிர்க் கட்சி வெளியேற்றம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம், எதிர்க் கட்சி எம்.பி.,க்கள் வெளியேற்றம்.

புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 71 நாட்களாக தொடர்ந்து வரும் விவசாயிகள் போராட்டம் டெல்லியில் சில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியில் தமிழக எம்.பி.,க்கள்

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திய விவசாயிகள்டெல்லியில் சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசால் கொண்டு வந்த வேளான் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் புதுடெல்லியில் தொடர்ந்திருக்கிறது.

இந்நிலையில் விவசாயிகளை சந்தித்து பேச சென்ற தமிழக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கனிமொழி, திருமாவளவன், திருச்சி சிவா,ஆகியோரை வெளியேற்றினர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பேருந்து பயணம்

டெல்லி அருகே உள்ளகாசிப்பூரில் அரங்கேறிய விவசாயி போராட்டங்களை நேரில் சந்தித்து ஆதரவளிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் புதுடெல்லியில் இருந்து காசிப்பூருக்கு பேருந்தில் தன் பயணத்தைத் தொடங்கினார்கள்.

காங்கிரஸ், தி.மு.க குழுவினர்

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே,திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுகதா ராய் அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல், தி.மு.க சார்பில்கனிமொழி, திருமாவளவன், திருச்சி சிவாஆகியோர் சென்றனர்.

எல்லையில் வெளியேற்றம்

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள்காசிப்பூரை வந்தடைந்ததும் அங்கு இருந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எம்.பி.,க்கள் விவசாயிகளை சந்தித்தாள் பிரச்சனை நேரிடுமோ என்று முன்னெச்சரிக்கையாக அவர்கள் எல்லையை கடக்கும் முன்னே தடுத்து நிறுத்தினர். அவர்களை வெளியேற்ற சாலையில் தடுப்புகள் மற்றும் முள் கம்பிகள் போடப்பட்டு போலீசார் சாலையை மறித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *