சின்ன சின்ன கண் அசைவில்… தீரன் அதிகாரம் 1 படம்
தீரன் அதிகாரம் ஒன்று, டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த வினோத் இயக்கத்தில், தமிழில் உருவான பரபரப்புடன், எதிர்பார்ப்பூட்டும் திரைப்படமாகும். பவாரியா நடவடிக்கை வழக்கிலிருந்து உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது கொள்ளையர்களின் கொடூர நடவடிக்கையையும், தமிழ்நாடு காவல் துறையினரின் தீரமான நடவடிக்கை தொடர்புடைய படமாகும். கார்த்திக் சிவகுமார் மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர் இந்த படத்தில் முன்னணி நடிகர்களாக உள்ளனர், அபிமன்யு சிங் முதன்மை எதிரியாக நடித்தார்
ஆண்: சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
ஆண்: லாலி லாலி
நானும் தூளி தூளி
பெண்: மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என்னிதயம்
நம்முயிருள் நிறையுதே
பெண்: லாலி லாலி நீ
என் தூளி தூளி
ஆண்: உன்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா
மேலும் படிக்க : கெடயா கெடக்குறேன்… களரி படம்
ஆண்: லாலி லாலி
நானும் தூளி தூளி
பெண்: லாலி லாலி நீ
என் தூளி தூளி
பெண்: காலை அணைப்பின் வாசமும்
காத்தில் கிறங்கும் சுவாசமும்
சாகும்போதும் தீர்ந்திடாது
வா உயிரே
ஆண்: காதில் உதைக்கும் பதமும்
மார்பில் கிடக்கும் நிறமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது
வா உயிரே
ஆண்: ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழை ஆகும்
இருவரும்: கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்
ஆண்: சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
ஆண்: லாலி லாலி
நானும் தூளி தூளி
பெண்: மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என்னிதயம்
நம்முயிருள் நிறையுதே
பெண்: லாலி லாலி நீ
என் தூளி தூளி
பெண்: உன்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா
இருவரும்: தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா
பெண்: லாலி லாலி நீ
என் தூளி தூளி
லாலி லாலி நீ
என் தூளி தூளி
மேலும் படிக்க : தொட்டு தொட்டு போகும் தென்றல்…