தினம் ஒரு கோயில்:-நவ கைலாயங்களில் முதல் தலம்
திருநெல்வேலி மாவட்டத்தில் புனித தலமாக பபநாசம் உள்ளது. ஜீவநதியாக கருதப்படும் தமிரபரனி ஆறு ஓடும், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது பாபநாச உலகம்மை திருக்கோயில். இன்று அந்த கோயில் சிறப்புகளை காணலாம்.
தல சிறப்பம்சங்கள் ;
நவ கைலாயங்களில் முதல் தலம் பாபநாசம். முதல் கிரகமான சூரியனுக்குரிய சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது .பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது.
தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது .
அம்பாள் உலகம்மை சன்னிதி முன்பு ஒரு உரல் இருக்கிறது, இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது . அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என நம்புகின்றனர்.