நடப்பு நிகழ்வுகளின் கேள்விகளின் தொகுப்பு!
டிஎன்பிஎஸ்சி மற்ற போட்டி தேர்வுகளில் அதிக அளவில் தேர்வர்கள் சவால்களை சந்திப்பது நடப்பு நிகழ்வுகள் பகுதியாகும். இப்பகுதியானது அகலமானது சற்று ஆழம் நிறைந்து காணப்படும். தேர்வர்கள் கவனமாக இருந்து கையாள வேண்டிய நடப்பு நிகழ்வுகளின் பகுதிகளில் கேள்வி பதில் பகுதியை உருவாக்கியுள்ளோம் படிக்கவும்.
1. 61 வது உலக சாந்த கிளாஸ் மாநாடு எங்கு நடைப்பெற்றது?
விடை: டென்மார்க் கோபஹேகன் நகரம்
2. இந்தியாவின் அலுவல் சாராத தனி சுதந்திரமுடைய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் யார்?
விடை: குமாரமங்கலம் பிர்லா, விஜய் தாக்கூர் சிங்
3. உலகளாய புத்தாக்க பட்டியலில் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் இடம் யாது?
விடை: 57 வது இடம்
4. நாட்டின் துணை குடியரசு தலைவர் பதவியேற்று ஒரு வருடத்தில் செய்த சாதனை எது ?
விடை: நாட்டின் 29 மாநிலங்களில் 28 மாநிலம் பயணம் செய்து இந்திய துணைக் குடியரசு தலைவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.
5. இந்திய துணை குடியரசு தலைவரால் வெளியிடப்பட்ட பாராளுமன்ற விவகாரங்கள், புள்ளி விவரங்கள், திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சர் விஜய் கோயல் எழுதிய எந்த நூலை வெளியிட்டார்?
விடை: பெபக் பாத்
6. சொத்துப் பதிவு செய்ய தட்கல் சேவை அறிவித்து மாநில அரசு எது?
விடை: பஞ்சாப் மாநில அரசு
7. மாநில இளைஞர் மேம்பாட்டிற்காக திறன் மேம்ப்பாட்டு உரிமையை முதன்முறையாக வழங்கியுள்ள மாநிலம் எது?விடை: சத்தீஷ்கர்
8. இந்திய அரசாங்கத்திற்கான சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: திரைப்பட நடிகர் அக்சய் குமார்
9. உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கிருஷி கும்ப் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியானது நடைபெற்ற நோக்கம் யாது?
விடை: விவசாயத் துறையில் விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில் தொடங்குபவர்கள் பரிமாறிக் கொள்ள உருவாக்கப்படட்தே நோக்கம் ஆகும்.
10. அடல் ஜி நே கஹா என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?விடை: பிரிஜேந்திர ரெஹியா
11. பள்ளி, கல்லுரிகள், பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களுக்கு துப்புரவுப் பணி வழங்கும் உலகின் முதல் நாடு எது?
விடை: ஸ்காட்லாந்து
12. செஷ்னாய் நகர் மற்றும் கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலைங்கள் நிர்வகிக்கமுழுப் பொறுப்புகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது ?
விடை: பெண்களிடம்
13 சென்னையிலுள்ள மொத்த மெட்ரோ ரயில் நிலையங்கள் எத்தனை
விடை: 26
14. மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் ஒட்டுமொத்த பதிவு செய்தலில் எந்த் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது?
விடை: தமிழ்நாடு
15. விசாகா குழு என்றால் என்ன?
விடை: தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் ஆய்வு செய்ய அமைப்பட்ட குழுவே விசாகா குழுவாகும்.
16. இந்தியாவை போர்த்திறன் சார்ந்த வர்த்தக அங்கிகாரம் பெற்ற நாடாக அறிவித்த நாடு எது?
விடை: அமெரிக்கா STA-1
17. இந்தியாவில் எதிர்காலப் போக்குவரத்து குறித்து நிதி ஆயோக்கால் ஆர்ம்பிக்கப்பட்ட கருத்தரங்கின் பெயர் என்ன?
விடை: மூவ் ஹேக்
18. வர்த்தகம் மற்றும் தொழிற்த்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்கொள்கை மேம்பாட்டுத்துறையால் அறிவிக்கப்பட்ட புவிசார் குறியீடு பொருட்களுக்கு கொடுக்கப்பட்ட முத்திரை யாது?
விடை: மூவர்ணக் கொடி முத்திரை
19. மூவர்ணக் கொடி முத்திரையின் கொடுக்கப்பட்டுள்ள தொழிற் கொள்கை மேம்ப்பாட்டுத்துறையின் புவிசார் குறியீட்டின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள யாது?
விடை: வியத்தகு இந்தியாவின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்
20 இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைகழகமானது எங்கு தொடங்கப்படவுள்ளது?
விடை: மணிப்பூரின் மேற்கு இம்பால்
21.ஆற்றல் நிறுவனங்களுடன் இணைந்து ஆற்றல் துறையில் உள்ள ஸ்டார்-அப் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் கொண்டுள்ள நிறுவனம் எது?
விடை: இன்வெஸ்ட் இந்தியா
22. காக்கத்தியா என்ற திட்டத்தின் தாக்கம் ஆராயும் மாநிலம் எது?
விடை: தெலுங்கானா
23. காக்கத்தியா திட்டத்தின் நோக்கம் யாது?
விடை: தெலுங்கானாவின் அனைத்து சிறுபாசன தொட்டிகள் மற்றும் ஏரிகள் மறுசீரமைப்பு செய்யும் திட்டம் ஆகும்.
24.இந்தியாவிலேயே காவல்துறையில் இல்லாத முதன்முறையாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்க டெல்லி காவல் துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பு யாது?
விடை: 36 கமாண்டோக்களை உள்ளடக்கிய அனைத்துப் பெண் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் செயல் தந்திர முறைகளுக்கான ஸ்வாட் குழு
25. இந்திய கடற்படை மேற்கொண்ட கேரளாவின் வெள்ளம் மீட்பு பணி நடவடிக்கையின் பெயர் என்ன?
விடை: மதத்