போட்டித் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் குறிப்புகள்!
போட்டித்தேர்வுக்கு படிக்கும் தேர்வர்கள் தொடர்ந்து திட்டமிட்டு படிக்க வேண்டும். போட்டித்தேர்வை முறையாகப் படிக்க வேண்டும். தேர்வர்கள் நன்றாகப் படித்தாலும் பயிற்சி என்ற படித்தவற்ற்றை டெஸ் மூலம் பரிசோதிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு ஆப்பிரிக்க நாடு டோகோ ஆகும். மனித ஆப்பிரிக்கா ட்ரைபனோசோமியாசிஸ் என்ற கொடிய நோயை இந்த நாடு ஒழித்தது.
“ரோல் ஆன் ரோல் ஆப்” திறந்தவெளி ரயில் பெட்டிகளில் பல்வேறு பொருட்களை எடுத்துச்செல்லும் இந்தச் சேவை 1999ஆம் ஆண்டு கொங்கன் ரயில்வேயில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சேவையின் மூலம் வாகனங்களையும் எடுத்துச் செல்ல முடியும் தற்போது பெங்களூரிலிருந்து பலே பகுதிவரை இந்த சேவையானது தொடங்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மரத்தை மேற்கு வங்கத்தில் துர்காபூர் பகுதியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உருவாக்கியது. 12,000 முதல் 14,000 வரை அலகுகள்வரையில் பசுமை ஆற்றலைச் சூரிய ஒளி மரமானது உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
சர்வதேச உணவு இழப்பு மற்றும் வீண் செய்தல் விழிப்புணர்வு தினமாக செப்டம்பர் 29 நாள் ஆகும். இதனை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உருவாகியிருக்கின்றது.
ஞான பீடம் என்பது இந்தியாவின் உயரிய இலக்கிய விருது ஆகும். 1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதலாவது ஞானபீட விருது 1965 ஆம் ஆண்டுக் கவிஞர் ஜி. சங்கரா குருப் அவர்களுக்கு வழங்கப்பட்டது
தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் ஒரு பகுதியாகத் தீனதயாள் உபாத்தியாயா கிராமீன் கௌசல்யா நிறுவன தினம் செப்டம்பர் 25-ஆம் நாள் அந்தியோதயா திவாஸாக அனுசரிக்கப்படுகின்றது.
ஸ்வாமித்வா திட்டம் மூலம் ஊரக நில உரிமையாளர்களுக்கு பட்டா உரிமையினை ஆன்லைன் மூலம் அக்டோபர் 11 2020ஆம் ஆண்டு பிரதமர் வழங்கவுள்ளார்.
விவசாய விலங்குகளுக்கான தினமாக அக்டோபர் 2ம் நாள் உலக விலங்குகள் அமைப்பு பின்பற்றுகின்றது.
இந்தியா வெற்றிகரமாக சவுரியா ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கின்றது. ஒடிசாவில் இந்த சோதனை அக்டோபர் 3ம் தேதி நடத்தப்பட்டது சவுரியா ஏவுகணை 800 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தாக்கும் திறன் கொண்டது.