போட்டித் தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகள்
போட்டித் தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகளை நன்றப் படிக்கவும். தேர்வினை வெல்ல இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நடப்பு நிகழ்வுகளால் நாம் முழுமையாக உணர்ந்திருத்தல் அவசியமாகின்றது. நடப்பு நிகழ்வுகளை அதன் ஆரம்பித்தில் இருந்தே நாம் உணர்ந்து படிக்க வேண்டும்.
ஸ்பெயினில் நடைபெற்ற ‘லா லிகா’ கால்பந்து தொடரின் ரியல் மாட்ரிட் அணி 34 வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை 2020ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர் கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை 2020ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். கொரோனா காரணமாக 2021ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
லேடிஸ் பஸ்ட் என்று பெயரில் பெண்கள் காவல்துறையில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள உதவி பெற கைபேசி தொடர்பு எண்கள் 9894515110 நாமக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் ஹலோ சீனியர் என்ற திட்டத்தின் கீழ் முதியோர்கள் காவல்துறையினரை தொடர்புகொள்ள 9994717110 எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு நம்பிக்கை என்ற விண்கலத்தை ஐக்கிய அரபு அமீரகம் முதல்முறையாக அனுப்பியுள்ளது.
டெல்லியில் இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கியானது ஜூலை 2ம் தேதி டெல்லி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.கொரோனா நோயிலிருந்து பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் மக்களை காக்க இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டது
இந்தியா ஜப்பான் நாடுகள் ஒத்துழைப்பை மேம்படுத்த கூட்டுப் கடற்படை பயிற்சியானது நடைபெற்றது. இதற்கு PASSEX என்று பெயர். கடல் இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஜப்பானின் ஜே.எஸ் காஷ்மீர் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்கள் பங்கேற்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உலகின் முதல் இணைய வழி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் இளநிலை பட்டப்படிப்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
திருப்பூர் ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளில் குஜராத் கல் பவளமணி கொடுமணல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவை 2300 ஆண்டுகள் பழமையானது மேலும் இங்குக் கிடைத்த எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களுடன் இருக்கின்றது