கொத்து கொத்தாக காவு வாங்கும் கொரோனா தொற்று..
கொரோனா என்னும் பெரும் தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது உலக வரலாற்றில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தினந்தோறும் கொரானாவின் பிடியில் சிக்கிக் கொண்டு அவதி அடைந்து வந்தனர். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பொருளாதார ரீதியாகவும் மிகவும் நனைவடைந்து உண்ண உணவின்றி கஷ்டப்பட்ட மக்கள் பல பேர் தங்களின் குடும்பங்களையும் உறவுகளையும் இழந்து அனாதையாக நின்றவர்கள் ஏராளமானோர்.
இவ்வாறு மக்களை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா தொற்று சில மாதங்களாக ஓய்ந்து இருந்தது எப்படியோ கொரோனா என்னும் அரக்கன் தொலைந்து விட்டான். இனியாவது நாம் இழந்த வாழ்க்கையை மீண்டும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கினர் ஆனால் போன மச்சான் திரும்பி வந்தான் என்ற கதையாக மீண்டும் கருணா புறந்தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது தமிழ்நாட்டில் நேற்றைய தினம் மட்டும் 2600 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக 3000 நபர்களுக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 1000 நபர்களுக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தருவதோடு தங்களால் தங்கள் குடும்பத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தங்களையும் பாதுகாத்து தகவல் குடும்பத்தையும் பாதுகாத்து தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும்.