செய்திகள்தேசியம்

ஆசிரியர்களை குறித்து மக்களின் கருத்து கணிப்பு

உலகின் 35 நாடுகளில் தலா ஆயிரம் பேரிடம் ஆசிரியர்கள் பற்றிய கருத்து கேட்கப்பட்டது. ஆய்வில் ஆசிரியர்களின் நிலை பற்றிய கருத்தில் நாடுகளுக்கு இடையே வேறுபாடு இருந்தன. வளர்ந்த நாடுகளில் ஆசிரியர்களின் நிலை பொதுவாக உயர்ந்து காணப்பட்டன.

  • ஆசிரியர்களை மதிப்பது முக்கியமான கடமை மட்டுமல்ல.
  • வளர்ந்த நாடுகளில் ஆசிரியர்களின் நிலை பொதுவாக உயர்ந்து காணப்பட்டன.
  • ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்கிறார் ஆய்வை மேற்கொண்ட பவுண்டேஷன் நிறுவனர். மறைமுக முறையில் ஆசிரியர்களின் நிலை குறித்து கனடா, மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் நேரடியாக மக்களிடம் கேட்கப்பட்டது.

புத்திசாலித்தனம் இல்லாதவர், புத்திசாலித்தனம் மிக்கவர், நம்பகத்தன்மை அற்ற, நம்பகமான, பாதிப்பை ஏற்படுத்துபவர், பாதிப்பை ஏற்படுத்தாதவர் உள்பட பல வகை கேள்விகளின் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டன.

ஆசிரியர்களைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை கடந்த வாரம் அறிவித்தன. நாட்டில் ஆசிரியர்களின் நிலை குறித்த மக்களின் மனதிறந்த கருத்துக்களின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் ஆசிரியர் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முதல் பத்து நாடுகளில் ஆறாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இவ்வாய்வு 35 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *