தாண்டவமாடும் கொரானா தடுமாறும் மத்திய மாநில அரசுகள்
கொரானா தொற்று பெருமளவில் இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகின்ற என்ற சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்திற்கு அதிகமானோர் கொரானாப் பாதிப்பால் பெரிய அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரானாவினால் தாக்கப்பட்டுள்ளனர் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.
இந்தியாவின் கடந்த மூன்று மாதங்களாகத் தான் இருந்த போதும் கோவித்-19 அதன் தாக்கம் குறைந்தபாடில்லை வீட்டுக்குள் இருந்தாலும் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது என்ற தகவல்களும் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கம்யூனிட்டி ஸ்பெரட் எனப்படும் தாக்கம் என்னும் ஏற்படவில்லை.
உலகளவில் கொரானாவின் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவின் அச்சம் பிடித்த வண்ணம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள் விழிப்புணர்வுகள் ஊரடங்கு பல தொழில்கள் முடக்கம் பள்ளிகள் முடக்கம் என எவ்வளவோ இந்தியா செய்துவிட்டது.
இந்தியாவை இந்த கோவித்-19 விட்ட பாடில்லை இந்த கோவித்தின் தொல்லையிலிருந்து தேசத்தை காக்க தேச மக்கள் நலமாக இருக்க ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பேணி பாதுகாக்க வேண்டும் முகமூடி அணிந்து கொள்வது சிறப்பு சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது அவசியமாகின்றது. ஆரோக்கியமான உணவு நல்ல தூக்கம் உறுதியான மனநிலை ஆகியவை இருந்தால் கொரானா தாக்கத்திலிருந்து உயிர்பெற்று வரலாமென அதனால் பாதிக்கப்பட்டவர்.
மன உறுதி ஆரோக்கிய உணவுகள்:
கொரானா பாதிப்பு குணமடைந்தோர் தெரிவித்துள்ள தகவல் இது, நாடு முழுவதும் கோவிலிலிருந்து விடுபட வேண்டுமென்றால் நாட்டுமக்கள் தங்களுடைய உணவு சுகாதாரம் மன உறுதி ஆகியவற்றை முழுமையாக பின்பற்ற வேண்டும். அதன்படி பின்பற்றினால் நிச்சயம் நாட்டில் மாற்றங்கள் கிடைக்கப் பெறலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்புணர்வு என்பது இந்த நேரத்தில் அவசியமாகின்றது.
கோவித்-19 உருவான நாள்முதல் இன்றுவரை இந்தியா பல்வேறு இடர்களை சந்தித்துவருகின்றது குறிப்பிடத் தக்கது ஆகும். இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் கோவித்-19 போன்ற தொற்றுகள் பரவுவதை தடுக்க ஒருவழி என்றால் ஆரோக்கியமான வாழ்க்கை மன உறுதியுடன் பணி செய்தல் ஆகியவை செய்ய வேண்டும்.
ஊரடங்கு நாளில் காய்கறி விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மாஸ்க் அணிந்து சுகாதாரம் பின்பற்றி வந்ந்தனர் தற்பொழுது அதனைப் பின்பற்றி வருகின்றனர். கோவில்களில் இ திறக்கப் பட்டாலும் சமூக இடைவெளி என்பது கடுமையாகப் பின்பற்றப்படுகின்ற ஒன்றாகும்.