செய்திகள்தமிழகம்தேசியம்

தலையெடுக்கும் கொரோனா உஷாராகுங்கள் மக்களே!

அதிகரிக்கும் கொரோனா கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த ஆறு மாத அளவிற்கு இல்லாத அளவு தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனா பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்ததன் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. போதுமான அளவு படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை தமிழக அரசு கையிருப்பில் வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை இந்த தகவலை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் .

அதிகரிக்கும் கொரோனா

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, சென்னை வரும் பன்னாட்டு விமான நிலையங்களில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு கொரோனா பாதிப்படைந்தவர்கள் இந்த பரிசோதனைகள் அகப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தினம் தோறும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது இருக்கின்றது. மேலும் இந்த பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனா மாநிலங்கள்

இந்தியாவில் நேற்று மட்டும் 2004 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் அதிகரித்திருக்கின்றது என்றே கூறலாம். இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி கர்நாடகா, கேரளா குஜராத் போன்ற மாநிலங்களில் தினசரி 500 வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை குறைந்த கவுண்டர்கள் வைத்திருந்த தமிழகத்தில் நேற்று மற்றும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அரசு மற்றும் சுகாதாரத்துறை அறிவுரைகளின்படி 4000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. மீண்டும் கொரோனா வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகின்றது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை

சமுதாய விழாக்கள் மக்கள் கூடும் இடங்கள் அரசியல் நிகழ்வுகளில் கூட்டம் கூடுவதை தவிர்த்து முக கவசங்களை அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தன்மை அதிகரிக்கிறது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. அரசு வழங்கிய அறிவுரையின்படி படுக்கைகள் ஆக்ஸிஜன் மருந்து மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதுடன் மேலும் தமிழக முழுவதும் தக்க நடவடிக்கைகள் ஏற்பட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒன்றாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து காணப்படுவது என்பதால் அதனை சரி செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

கவனம் தேவை

கொரோனா அச்சம் மீண்டும் தலையெடுப்பதால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பணியாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் சுற்றுப்புறத் தூய்மை என்பது மிகவும் அவசியமாகின்றது இதனை அனைவரும் பின்பற்றுங்கள் நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *