12 ஆண்டுகாலம் நிறைவு :- கேக் வெட்டி கொண்டாடிய முன்னணி நடிகை..
தமிழின் முன்னனி நடிகையாக உள்ள சமந்தா சினிமாவில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

2010 பிப்ரவரி 26 அன்று வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் மூலம் அறிமுகமானவர் சமந்தா. இதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தென்னிந்திய திரைப்படத்துறைகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
மேலும் படிக்க : திரிஷா இருக்(கு)காங்க ஆனா இல்ல

இவர் திரையுலகுக்கு அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்நிலையில், “லைட்ஸ், கேமரா, ஆக்சன் என்றே எனது 12 ஆண்டு காலம் கடந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

சினிமா துறையில் 12 வருட நிறைவு கேக் வெட்டி கொண்டாடும் நடிகை சமந்தாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : செமையா இருக்கும் 96 ஜானுவின் போட்டோ ஷூட்
