முன்னணி சமூக வலைத்தளங்கள் மீது புகார்
பொழுதுபோக்காக நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வணிகம் செய்கின்றன. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து சமூக வலைதளங்கள் உறுதி அளிக்க வேண்டுமென அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளன. இப்படியிருக்க தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளது சமூக வலைதளங்கள். ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் உலகையே தன் கைக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் மாகாண அரசுகள் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளன.
- தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளது சமூக வலைதளங்கள்.
- அமெரிக்கா மற்றும் மாகாண அரசுகள் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளன.
- மூன்று நிறுவனத்தையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
முன்னணி சமூக வலைத்தளங்கள்
பிறகு இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என முன்னணி சமூக வலைத்தளங்களையும் தன் நிறுவனத்தின் கீழே கொண்டு வந்து அமர்ந்துள்ளது. தற்போது இது பெரிய விவகாரமாக பிரச்சனை எழுந்துள்ளது ஃபேஸ்புக்கு. அமெரிக்கா மற்றும் மாகாண அரசுகள் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளன.
இந்த மூன்று சமூக வலைத்தளங்கள் இருப்பதால், சிறிய சமூக வலை தளங்களை முடக்கி வருவதாக பேஸ்புக் மீது புகார் வந்துள்ளன. எந்த ஒரு சிறிய சமூக வலைத்தளமாக சிறிய நிறுவனம் முயற்சியை தொடங்கினாலே ஆரம்பத்திலேயே நசுக்கி விடுவதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களையும் பணத்தை கொட்டிக் கொடுத்து தன்னுடைய நிறுவனங்களாக மாற்றி அமைத்து விட்டனர் என புகார்தாரர் தெரிவிக்கின்றனர்.
பல பிரச்சனை இருப்பதாக புகார்
ஒரே நிறுவனத்தின் கீழ் அனைத்து தரப்பினரும் இருப்பதால் அவர்கள் தகவல்களும் ஒரே இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விளம்பரத்தின் மூலம் தனிப்பட்ட விருப்பத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பல பிரச்சனை இருப்பதாக புகார்கள் கூறியுள்ளனர். இந்தப் பிரச்சனை தற்போது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனத்திற்கு என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா
இந்த மூன்று நிறுவனத்தையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் கடுமையாக பங்குகள் புகாரின் பேரில் சரிந்துள்ளது. இந்த வழக்குக்கான பிரச்சனை தீர்வுகள் பல வருடங்கள் எடுக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு பிரச்சனைகளும் இல்லை. இந்த பிரச்சனையின் காரணமாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களின் பாதுகாப்பில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது பயனாளர்களின் அச்சமாக இருக்கின்றன.
உடனடியாக தன்னுடன் இணைத்துக்கொள்ள காத்திருக்கு
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இடையே ஃபேஸ்புக் பயனர்கள் தரவுகளை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது சரிவர தெளிவாக விளக்கம் தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்க அரசு வழக்கில் வெற்றி பெற்றால் மூன்றும் பிரிந்து சென்று தனி நிறுவனங்களாக மாறக்கூடும். இப்படி நடந்தால் மூன்றையும் ஒருங்கே வைத்துள்ள பேஸ்புக் என்ன செய்யும்? தகவல்கள் பாதுகாக்கப்படுமா? என்ற பல சந்தேகங்களும் எழுந்துள்ளன. பேஸ்புக்கிலிருந்து இன்ஸ்டா பிரிந்தால் ட்விட்டர் வழி மேல் விழி வைத்து காத்திருக்கு பேஸ்புக்கை உடனடியாக தன்னுடன் இணைத்துக்கொள்ள என்பது குறிப்பிடத்தக்கது.