கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு அறிவுரை
இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கடந்த 8 மாத காலமாக தொற்றுநோயாக கொரோனா பெருகி வந்தது. கொரோனா காலம் என்பதால் முகமுடி மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். கோவித்-19 காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
- கல்லுரிகள் திறக்கப்படுவதால் மாணவர்களுக்கு கொரோனா அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
- கொரோனா தொற்று நோய் தொல்லை குறைந்த காரணத்தால் நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் சீரான நிலைமை இருப்பதால் கல்லூரிகள் மீண்டும் திறக்க அரசு அறிவித்திருக்கிறது.
நடப்பு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை
நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைனில் செய்யப்பட்டது வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதாகும். நவம்பர் 12 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது இருப்பினும் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்
மாணவர்கள் கல்லூரிக்கு வரும்பொழுது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முக கவசம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் தூய்மை என்பதை பின்பற்ற வேண்டும். இறுது ஆண்டு படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு பயிலும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் ஏழாம் தேதி முதல் வகுப்புக்கு தயாராகின்றனர் என தகவல்கள் கிடைத்தன இருப்பினும் இன்று தொடங்கப்படும் கல்லுரிகளுக்கு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஆன்லைனில் கல்லூரி பாடங்கள் மற்றும் சேர்க்கை
கடந்த 8 மாத காலமாக கல்லூரி பாடங்கள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடங்கள் அனைத்தும் சவுகரியமாக இல்லாதபோதிலும் மாணவர்கள் அதனை சூழலுக்கு ஏற்றவாறு தங்களை சரிப்படுத்தி செயல் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்