சாக்லேட் பிஸ்கட் கேக்
சாக்லேட் பிஸ்கட் கேக் வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். மேரி பிஸ்கட், கொக்கோ பவுடரை வைத்து இந்த சாக்லேட் பிஸ்கட் கேக் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் : கோகோ பவுடர் அரை கப், சர்க்கரை முக்கால் கப், பால் ஒரு கப், வெண்ணெய் ஒரு ஸ்பூன், மேரி பிஸ்கட் 20, பிஸ்தா 10.
செய்முறை விளக்கம் : முதலில் சாக்லேட் சிரப் தயாரிக்க தொடங்க வேண்டும். இவற்றைத் தயாரிக்க சர்க்கரை மற்றும் கோகோ பவுடரை இரண்டும் கலந்து, அடி கனமான பாத்திரத்தில் போட்டு இவற்றுடன் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, இந்த கலவை பாத்திரத்தை வைத்து 5 நிமிடங்கள் வரை தீயை மீடியம் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். சிரப் வந்த பிறகு அடுப்பை ஆஃப் செய்து இறக்கி விடவும்.
சிரப்பை குளிர வைத்து இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். நன்றாக ஆறியதும் மேரி கோல்ட் பிஸ்கட் சிறுதுண்டுகளாக பொடித்து, சாக்லேட் சிரப்பில் சேர்த்து நன்கு கலக்கவும். தயாரிக்கப்பட்ட சாக்லேட் பிஸ்கட் கலவையை வெண்ணை தடவிய பேக்கிங் பானில் மாற்றி கரண்டியால் சமமாக அழுத்தவும்.
நறுக்கிய பிஸ்தாவை தூவி அலங்கரித்து ஐந்து மணி நேரம் குளிரூட்டவும். பிறகு வெளியே எடுத்து தேவையான ஷேப்பில் கட் செய்து சாக்லேட் பிஸ்கட் கேக் பரிமாறலாம். சுவையான சாக்லேட் பிஸ்கட் கேக் தயார்.
குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கெட் கடையில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக இதை வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.