டிராகனாய் சீரும் சீனா புலியாய் பதுங்கும் இந்தியா
சீன எல்லையில் இந்திய வீரர்களிடம் அடக்கி வாசிக்காமல் அதிரடியாக பேசிய சீன டிராகன்களை இந்திய புலி ராணுவ வீரர்கள் பொறுமை வாய்ந்த பொறுப்புடன் கையாண்டனர். அந்த வீடியோக்களை பார்க்கும் போது எவ்வளவு பொறுப்பு இந்த தேசத்திற்கும் நாட்டு மக்களின் மீதும் இந்திய ராணுவத்திற்கு இருக்கின்றது. என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருந்தபோதும் இந்தியா இதனை மறுத்தது. உலக நாடுகள் சீனா மீது கடுப்பில் உள்ளன. இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றது இதனை எண்ணி நாம் பெருமிதம் கொள்வோம்.
எல்லையில் இந்தியா 37 பாலங்கள் கட்டியுள்ளது. சீனாவின் இறக்குமதியை குறைத்தது. சுரங்க சாலை எனப்படும் ஸ்ரீநகர் முதல் லடாக் இடையிலான சுரங்கச்சாலை எல்லைப் பகுதியில் இந்தியா அமைத்து இருப்பதால் டிராகன்கள் எல்லாம் இந்தியாவிடம் தள்ளுமுள்ளு செய்கின்றன. இவ்வளவு நடந்தும் ராஜ்நாத்சிங் கம்பீரமாக சீனாவை ஒட்டிய இந்திய எல்லையில் பாலம் கட்டும் பணியை இந்தியா தொடர்ச்சியாக எப்போதும் போல் செய்து முடிக்கும் என்று போட்டாரே ஒரு போடு அங்குதான் சீனாவிற்கு ஆத்திரம் அதிகமானது நம்மிடம் இப்போது ஆட்டம் காட்டுகின்றது.
ஆசிய மாநாட்டில் ஏற்காத பிரதமர்:
குள்ளநரி சீனாவை எப்போதும் குறுகுறு பார்வையில் உற்றுநோக்கி வந்த இந்தியா இதுதாண்டா இந்தியா என்ற ஸ்டைலில் அடித்து ஆடுகிறது என்று சொல்லலாம். கடந்த தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் இந்தியாவிற்கான சாதகமான திட்டங்கள் எதுவும் இல்லாததால் போங்கடா போக்கத்த பசங்களா என்ற போக்கில் பிரதமர் அவர்கள் மாநாட்டில் கையெழுத்திடாமல் வெளியேறினார்.
உண்மையில் இது மிகப்பெரும் கெத்து எனலாம் இதன்மூலம் சீனாவிற்கு இந்தியா மூலம் வருமான வாய்ப்பு தரும் திட்டங்களைப் புறக்கணித்தார். கோவித்- 19கொள்ளை வைரசை வைத்து உலகத்தை அச்சுறுத்தலில் நிறுத்திய சீனாவின் மீது உலக நாடுகளில் காண்டில் இருக்கின்றன. இந்த நிலையில் நிலையினை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது இந்தியா. கொரானா பாதிப்பு காரணமாக எச்டிஎஃப்சி பங்குகளை 10% வாங்கிப் போட்டது சீனா.
அன்னியச் செலாவணியை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று செக் வைத்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை குறைக்க சீன ஆயத்தமானது சீனாவிடமிருந்து இறக்குமதிக்கு இந்தியா வைத்தது ஆப்பு இமயமலையின் 16,000 அடி உயரத்தில் சுமார் 225 கிலோ மீட்டர் நீளம் சியோக், டாக்ஸி ஆறுகளுக்கு இடையில் லைன் ஆப் ஆக்சுவல் என்று அழைக்கப்படும் இந்திய சீன எல்லை கோட்டுக்கு உட்பட்ட பகுதியில் இந்தியா கட்டிய மாபெரும் பீடர் ரோடு சீனாவிற்கு பீதியை கிளப்பி விட்டது என்று சொல்லலாம்.
இந்தியாவும் சீனாவும் ஒன்றினைந்து செயல்படவேண்டும் என்பதை மல்லுக்கு வந்த சீனாவே அறிவித்து பதற்றம் தணிக்க முயற்சி செய்தது. உலக சுகாதார நிறுவனத்தில் செயற்குழு தலைவராக இந்திய ஹர்ஷவர்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கொரனா ஆய்வு ஹர்ஷவர்த்தன் தலைமையில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இது போன்ற உருட்டால் சீனாவைப் பார்த்து இந்தியா பயப்படும் என்ற கணிப்புள்ளது. ஆனால் இதெற்கெல்லாம் அசரும் நாடா இந்தியா.