குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு
குழந்தை வளர்ப்பில் நாம் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும் வகையில் உணவுகளை கொடுக்கக் கூடாது.
அதாவது சமைத்த உணவை ஒன்றரை மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும்.
இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கக் கூடும். பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களை அவர்கள் மேல் திணிப்பதை விட்டு விடுங்கள்.
குழந்தைகள் தனது திறனை தானே கண்டறிய ஊக்குவிக்க மட்டும் செய்யுங்கள். குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் கொண்ட மசாலா அடங்கிய உணவுகளை கடைகளில் வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கு வெள்ளை பூசணியை தவிர்த்து விடலாம்.
வெள்ளைப் பூசணியின் சாறெடுத்து தேன் கலந்து தினமும் உண்பதால் வளரும் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும். இவற்றின் மூலம் அவர்களது கற்கும் திறனும், வளர்ச்சியும் மேம்படுத்த முடியும்.
நிறைய காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய தானியங்களை கொடுப்பது அவர்களை இன்னும் அதிகமாக துடிப்பானவர்களாக, உயிர்ப்புள்ளவர்களாக உருவாக்கும்.
எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும். அசைவ உணவு கொடுப்பதை கூடிய மட்டும் தவிர்த்து விடலாம்.
9 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் எழுப்பி ஏதாவது ஒரு செயலை செய்ய பழக்க வைக்க வேண்டும். நாளடைவில் இது ஒரு நல்ல பழக்கமாக தொடரும்.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களின் உணவுப் பழக்கங்களையும் மாற்றி ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்.
நாம் குழந்தைகளுக்குக் கைபேசியை தருவதை தவிர்த்துவிட்டு மாறாக அவர்களது ஆர்வம் எந்த திறனில் உள்ளது என்பதை கண்டறிந்து அதில் அவர்களை ஈடுபடச் செய்தால் அவர்களது மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டாக, வண்ணப் படம் தீட்டுவது, கைவினைப் பொருட்கள் செய்வது, மரம், காகிதம் மற்றும் களிமண்ணாலான பொம்மைகள் அல்லது விளையாட்டுப் பொருட்கள் செய்வது, பனை ஓலை அல்லது தென்னம் ஓலை கொண்டு சிறு பெட்டிகள் போன்று உபயோகப் பொருட்கள் செய்வது என்று அவர்களை உற்சாகப்படுத்துவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதோடு தங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள விசயங்களைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளைச் சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சித்தால் அவர்கள் புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் நல்ல குணங்களோடு வளருவார்கள்.