பார்ப்பது, சிரிப்பது, எல்லாம் இதற்க்கு தானா..!!
ஒவ்வொரு பெற்றவர்களும் தன் குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று ஆவலாக இருப்பார்கள். குழந்தை பிறந்து அதற்கு ஒரு மாதம் ஆவதற்குள் தன்னைச் சுற்றியுள்ள சத்தத்தை குழந்தையால் உணர முடியும். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போடாமல், உடனடியாக பெயர் வைத்து அழைப்பதால் தன்னுடைய பெயரை அறிந்து அக்குழந்தை திரும்பிப் பார்ப்பதில்லை.
சப்தங்கள் அறிய முயலும்
எந்தப் பக்கம் சத்தம் வருகிறதோ அதை உணர்ந்து தான் திரும்பிப் பார்க்கும். அப்பெயரை கூறி அழைத்துக் கொண்டே இருப்பதால், நாளடைவில் சிலரின் குரலை நன்கு ஞாபகம் வைத்துக் கொண்டு, உதாரணமாக அம்மா, அப்பா, சொந்தங்களின் குரல்கள் என அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்களின் குரலை ஞாபகம் வைத்துக் கொள்ளும். தனது கேட்கும் சப்தங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதையும் அறிய முயலும்.
இந்த சப்தத்தை தேடும் முயற்சியில் தான் குழந்தைகள் நீங்கள் சத்தம் எழுப்பும் பொழுது பார்ப்பது சிரிப்பது எல்லாம் நிகழ்கின்றன. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு பெயர் சூட்டிய பின் முடிந்த அளவு அவர்களின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். குழந்தைகளின் பெயர் சொல்லி அழைப்பது தான் புரிந்து கொள்வர். குழந்தைகளை கொஞ்ச வேண்டியதும், அதன் செல்ல பெயரும் வேண்டியது அவசியம் தான்.
முகத்தோடு முகம் நோக்கி
ஆனால் அந்த செல்ல பெயரைக் கொண்டே குழந்தையை அழைத்து குழந்தையின் உண்மையான பெயரை புறக்கணிப்பு விடாதீர்கள். முதலில் குழந்தைகளின் முகத்தோடு முகம் நோக்கி, பேசி அழைத்து பழக்குங்கள். அதன் பிறகு தானே குழந்தை உங்கள் குரல் எங்கிருந்து வருகிறது, என்று தேட ஆரம்பித்துவிடும். இருப்பினும் அதனை முழுமையாக அழைத்து குழந்தையை கூப்பிடுவது. அப்பொழுது தான், அவர்களின் பெயர் குழந்தைகளின் மனதில் நன்கு பதியும்.
பெற்றோர், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும். உறவுகள் குழந்தைகளுடன் அதிகம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடைய பெயர் கூறி அழைக்க வேண்டும். சொல்லி அழைக்கும் பொழுது அது தனது பெயர் என்று உணர்ந்து கொள்ள குழந்தைகளுக்கு ஆறு அல்லது ஏழு மாத கால வயது ஆகும் பொழுது தான், குழந்தைகள் தனது பெயரின் இன்னது என்று அறிந்து கொள்வார்.