மிக்ஜாம் புயலால் மூழ்கும் சென்னை; புயல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை
மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னையே ஒரு தீவு போல் மாறி காட்சி அளிக்கிறது. மிக்ஜாம் புயல் என்ற அரக்கனின் பிடியிலிருந்து இப்பொழுதுதான் சென்னை மெல்ல மெல்ல வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. புயலின் கொடூர தாண்டவத்தால் சென்னை மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கார்கள் பைக்குகள் விலங்குகள் மரங்கள் என அனைத்தும் நீரில் சென்று விட்டன மக்கள் தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு கூட முடியாமல் ஈடுபடுவதற்கு தண்ணீர் தேங்கி தீர்வு போல் காட்சி அளிப்பதால் மக்கள் கடும் பகுதிக்கு உள்ளாகியுள்ளனர் மேலும் மழை வெள்ளத்தால் வீடுகளில் மின்சாரமும் இல்லை அனைத்து பொருட்களும் அடித்து சென்று விட்டதால் சாப்பிடுவதற்கு உணவும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மிக்ஜாம் புயல் நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். தற்போது எக்ஸாம் புயல் சென்னை மக்களை விடுவித்து விட்டது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்து உள்ளனர். 70 சதவீதம் நீர் வடிந்துவிட்டது இன்னும் 30 சதவீதம் நீர் மட்டுமே உள்ளது அதுவும் விரைவில் வடிந்துவிடும் என பேசி உள்ளார்.
மேலும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு மட்டும் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் வாடும் மக்கள் இனி கவலைப்பட வேண்டாம் கூடிய விரைவில் தண்ணீர் வெளியேற்றி உங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் கிடைத்துவிடும் நீங்கள் அதுவரை தைரியமாக இருங்கள்.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை மீட்டெடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மிக கடுமையாக உழைத்து வருகின்றனர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.
இப்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல்வாதிகளை நம்புவதில்லை அதிகாரிகளை தான் நம்புகிறார்கள். எனவே அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொண்டு எப்பொழுதும் இதுபோன்ற சூழலில் மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.