சென்னையில் கொரோனா பாஸிடிவான பாடகர்
கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் சென்னை நோய் தொற்றின் இருப்பிடமாகவும் பரப்பிடமாகவும் விளங்குகிறது. திரை உலகத்தில் மற்ற மொழிகளில் பல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் சென்னையில் பிரபலமானவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னணிப் பாடகரான எஸ். பி. பாலசுப்பிரமணியன் (எ) எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சளி ஜலதோஷத்தால் ஏற்பட லேசான மூக்கடைப்பு மாரடைப்பு மற்றும் இடைப்பட்ட வேளையில் காய்ச்சலும் வந்து போக சூளைமேட்டில் இருந்த தனியார் மருத்துவமனையில் பரிசோதனையை மேற்கொண்டார் எஸ்.பி.பி.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இன்று மருத்துவமனையிலிருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் தமக்கு லேசான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அளித்த மருந்துகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை அளித்துள்ளனர். ஆனால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்வது கடினமான விஷயமாக இருப்பதால் சிறிது ஓய்வு பெறுவதற்காகவே மருத்துவமனையில் இருக்கிறார். மேலும் தாம் நன்றாக இருப்பதாகவும் யாரும் தமக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஓய்விற்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை சுட்டிக் காட்டும் விதத்தில் இந்த காணொளியில் கூறியுள்ளார்.
இவரின் புகழ் பட்டிதொட்டி தோறும் அனைவருக்கும் தெரிந்தது. தமிழ் தெலுங்கு மலையாளம் என 16 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி. அந்தப் பாடல்களின் மொத்த கணக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டது. இவ்வாறு திரையுலகில் சாதனை படைத்த இவருருக்கு பல விருதுகளையும் பாராட்டுகளையும் அளித்து இவரின் புகழை நிலைநாட்டி இருக்கிறது திரையுலகம்.
அரசின் பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதின் சொந்தக்காரருமாக திகழுகிறார் எஸ்.பி.பி. மக்களை கவலைப்படாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் அந்த நல்ல உள்ளம் படைத்த எஸ்.பி.பி. கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.