உலக சாதனை படைத்த சென்னை சிறுவர்கள் நாணய சேகரிப்பில் அசத்தல்
சென்னை விருகம்பாக்கத்தில் பத்மா சங்கரபாடி பள்ளியில் கவின் ஆறாம் வகுப்பு படிக்கிறார். பொழுதுபோக்காக நாணயச் சேகரிப்பு தொடங்கிய கவின். 1980 தொடங்கி 2000ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட பல்வேறு இந்திய நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். பல்வேறு வெளிநாடுகளில் நாணயங்களை சேகரித்துள்ளார்.
- 1980 தொடங்கி 2000ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட பல்வேறு இந்திய நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார்.
- 10 பைசாவில் இருந்து 5 ரூபாய் வரை 36 வகையான இரண்டு ரூபாய் நோட்டுகள் என இந்திய நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் சேகரித்துள்ளார்.
- 1985 முதல் 2019 வரையிலான ஐந்து ரூபாய் நினைவு நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.

10 பைசாவில் இருந்து 5 ரூபாய் வரை 36 வகையான இரண்டு ரூபாய் நோட்டுகள் என இந்திய நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் சேகரித்துள்ளார். 1991 சுற்றுலா ஆண்டுக்கான நாணயம், நினைவு நாணயம், பழைய நாணயங்கள், பழங்கால நாணயங்கள், செல்லாதவை உள்ளிட்டவைகள் என்று விரிவாக அறிந்து வைத்திருக்கிறார்.
தனித்துவமான ரூபாய் நாணயங்கள்
சென்னையை சேர்ந்த 8 வயது சிறுவன் சாய் சரண்குமார். 1985 முதல் 2019 வரையிலான ஐந்து ரூபாய் நினைவு நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளார். அறுபத்தைந்து தனித்துவமான ஐந்து ரூபாய் நாணயங்களை சேகரித்து உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்க்ளூசிவ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள். கவின்குமார் சேகரித்த வெளிநாடு மற்றும் உள்நாடுகளின் அபூர்வமான நாணய சேகரிப்பு உலக சாதனை படைத்துள்ளது.