யூபிஎஸ்சி தேர்வில் மாற்றமா!
மத்திய ஆட்சிப்பணியான சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் வருகின்றது என்று கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அரசுப் பதில் கொடுத்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற நாட்டின் முக்கிய பதவிகளில் தேர்வு எழுதும் சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகின்றது.
மத்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுக்கள் மூன்று கட்டமாக தேர்வு நடத்தப்படுகின்றன. முதல் கட்டத்தில் முதல் நிலை அடுத்து பிரதான தேர்வு இவற்றில் தேர்வுப் பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மூன்று கட்டங்களில் தேர்வு பெறும் தேர்வர்கள் மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப் படுவார்கள்.
முதல்நிலை தேர்வுத் திறனாய்வுச் சோதனை தேர்வு இடம்பெற்றது. இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வியானது மத்திய அரசு ஆப்டிடியூட் என அழைக்கப்படும் திறனாய்வுத் தேர்வைக் கைவிடுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேர்முக தேர்வு நடத்துவதற்கு பதிலாக உளவியல் எனும் சைக்காலஜி தேர்வைக் கொண்டுவருவது மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வு முறையை மாற்றப் போகிற முறைகளுக்கான கேள்விகளுக்குக் கிடைத்த பதிலானது 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகள் முடிவுகள் தாமதமானது என்பது உண்மைதான் இதுகுறித்த முடிவுகளை விரைவில் அறிவிப்போம் என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய ஆட்சிப்பணியகம் என அழைக்கப்படும் யூனியன் சிவில் சர்வீஸ் நாட்டின் முக்கிய பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 21 பணியிடங்களுக்கு வருடந்தோறும் தேர்வுமூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும். 3 கட்டமாக நடைபெறும் தேர்வினை வெல்வோர் அடுத்து அந்தந்தப் பணிக்கு ஏற்ப பயிற்சியில் குறிப்பிட்ட காலம் வைக்கப்பட்டு பின் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் மேலும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சிவில் தேர்வினை எழுதுவதை கனவாக கொண்டு நாட்டின் முக்கிய மாநிலங்களில் படித்து வருகின்றனர்.
சிவிர் சர்வீஸ் தேர்ச்சி என்பது கடினமானது. சவால்கள் நிறைந்தது இத்தேர்வை வெல்ல நாம் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இடைவிடாத முயற்சி மற்றும் இலக்கை நோக்கி அதிகமாகக் கவனமாக இருக்க வேண்டும் ஃபோக்கசாக இருக்க வேண்டும்