Chandra Grahan 2023: சந்திர கிரகணம் 2023 இந்திய நேரப்படி தோன்றும் தேதி,நேரம் மற்றும் செய்ய வேண்டியவை
இந்திய நேரப்படி சந்திர கிரகணம் அக்டோபர் 28ஆம் தேதி இரவு 11.32 மணிக்கு தொடங்கும்.மேலும் அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை 3.26 மணி வரை சந்திர கிரகணம் தோன்றும்.

சந்திர கிரகணம் 2023
சூரியனுக்கும் சந்திரனுக்கும் முன்னால் பூமி நகரும் பொழுது அது சந்திரனில் ஒரு நிழலை உருவாகிறது. அப்பொழுதுதான் சந்திர கிரகணம் தோன்றுகிறது. இந்த சந்திர கிரகணம் அண்டத்தை பாதிக்க கூடியது மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்திய நேரப்படி சந்திர கிரகணம் 2023 தோன்றும் நேரம்
இந்தியாவில் இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி தோன்றியது. இந்த ஆண்டிற்கான இரண்டாவது சந்திர கிரகணம் 2023 இந்திய நேரப்படி அக்டோபர் 28ஆம் தேதி 11.32 மணிக்கு தொடங்கும். அக்டோபர் 29ஆம் தேதி காலை 3.26 மணி வரை சந்திர கிரகணம் இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் மொட்டை மாடியில் நின்று வெறும் கண்களால் கூட சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணம் ஜோதிட முறையில் படி புனிதமான நிகழ்வாகும் சந்திர கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த மந்திரங்களை கூறுவதன் மூலம் நமக்கும் நன்மைகள் கிடைக்கும்.

சந்திர கிரகணத்தின் 2023 போது நாம் கவனிக்க வேண்டியவை
புனிதமான நிகழ்வாகப் கருதப்படும் மங்களகரமான நேரமான சந்திர கிரகணத்தில் போது சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி கடவுளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தின் போது வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் மேலும் அந்த சமயத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் . கிரகணத்திற்கு முன்ப உணவு சாப்பிட்டு விடுங்கள் சந்திர கிரகணம் முடிந்த பின்பு குளித்துவிட்டு சாமிக்கு தீபாராதனை காட்டி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

சந்திர கிரகணத்தின் போது சமைப்பதோ , உண்பதோ கூடாது. மேலும் இச்சமயத்தில் இசை மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது செய்ய வேண்டாம்.
புனிதமான சந்திர கிரகணத்தின் பொழுது ஆடை மற்றும் உணவுகளை மற்றவர்களுக்கு தானம் செய்வதால் நன்மைகள் கிடைக்கும்.