ஜாக்கிரதையா இருங்க சந்திராஷ்டமி
சந்திர கிரகணம் வருகின்ற ஜூன் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 05/06/2020 வைகாசி பவுர்ணமி. இன்று இரவு 11.15 pm முதல் அடுத்த நாள் அதிகாலை 2.34 am சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இன்றைய தினத்தில் கேட்டை நட்சத்திரம் என்பதால், அந்த நட்சத்திரக்காரர்களும் கேட்டை நட்சத்திரம் முன்பு உள்ள அனுஷ நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்திற்கு பின்பு உள்ள மூல நட்சத்திரக்காரர்களுக்கு, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்.
என்னென்ன செய்யக்கூடாது
மற்ற ராசிக்காரர்களுக்கும் இந்த கிரகங்களால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளை கையாளலாம். என்னென்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். அன்று காலை பவுர்ணமி பூஜையை முடித்து விட வேண்டும். அன்று மதியத்திலிருந்து இறைவனை பூஜிப்பது கூடாது. உங்கள் பூஜை அறையை மூடிவிட வேண்டும். கோவில்கள் திறக்கப்படாது.
அதுபோலவே வீட்டிலும் பூஜையறையை மூடிவிடவேண்டும். உங்கள் வீட்டில் நீர், அரிசி, பால், மாவு பொருட்கள், இவற்றில் தர்ப்பைப் புல்லை சிறிது போட்டு வைக்க வேண்டும். தர்ப்பைப் புல் கிடைக்காதவர்கள், அருகம்புல்லை போட்டு வைக்கலாம். இதனால் கிரகங்களின் பாதிப்பு உணவுப் பொருட்களில் சேராமல் இருக்கும். இரவில் கிரகணம் தோன்றுவதால் கிரகணத்துக்கு முன்னதாக 2 மணிநேரமும், கிரகணம் முடிந்து இரண்டு மணி நேரம் பின்னதாகவும் எந்த உணவையும் சாப்பிடுதல் கூடாது.
இதனால் உணவில் மூலம் உணவு குழாய்களிலும், வயிற்றுப் பகுதிகளிலும், பிரச்சினையை உண்டு பண்ணும். ஆனால் நாம் மனதளவில் இறைவனை பிரார்த்திக்கலாம். இறைவனின் நாமங்களை உச்சரிக்கலாம். இதனால் கிரகங்களின் பாதிப்பு குறையும். நமக்கு எந்த தீங்கையும் தராது. மாறாக நாம் என்ன நினைத்து பிரார்த்தனை செய்கிறோமோ அது பல மடங்காக பெருகும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள்
12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இரவு முழுவதும் தூங்கி, காலை எழுந்ததும் உடலையும், வீட்டையும், சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது குளித்துவிட்டு, வீட்டையும் துடைத்து விட வேண்டும். குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிக்கலாம். இதனால் கடலில் குளித்த பலன் கிடைக்கும். குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்த பிறகு, உங்கள் பூஜை அறையை திறந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.
அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு இரண்டு தீபங்கள் ஏற்றலாம். இதுவே அனைத்து ராசிகளுக்கும் உரிய எளிய பரிகாரங்கள் ஆகும். இதை செய்தாலே கிரகங்களின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும். இந்த எளிய பரிகாரத்தை செய்து வருகின்ற சந்திர கிரகணத்தில் இது எல்லாம் செய்து வாழ்வில் முன்னேற்றத்தை பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.