Job opportunity 2024 : டிகிரி முடித்தால் போதும் மத்திய அரசின் EPFO அலுவலகத்தில் அறிய வேலைவாய்ப்பு
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் (EPFO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியீட்டு உள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்ததால் போதும் எனவே டிகிரி முடித்த நபர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெறுங்கள்.
காலிப்பணியிடம்
EPFO எனப்படும் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக விட நேர்முக உதவியாளர் பணிக்கு 323 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி
EPFO வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் நேர்முக உதவியாளர் பணிக்கு கட்டாயம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள் அடிக்கும் அளவு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்த பட்சம் 18 வயது உடையவராகவும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்கலாம். எஸ்சி எஸ்டி பிரிவினர் 18 முதல் அதிகபட்சமாக 35 வயது வரை உடையவராக இருக்கலாம்.
தேர்வு முறை
நேர்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாளர்கள் எழுத்து தேர்வின் மூலமும் அதன் பின்பு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 27.03. 2024 ஆகும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இதற்கான எழுத்து தேர்வு 7.7.2024 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்