கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருந்த போதிலும் நான் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்கள் எந்த நேரத்திலும் பிரதமர் அலுவலகத்தை நெருங்கலாம் என்பதால், பதுகாப்பு காரணங்களுக்கு பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து பிரதமர் ட்ரூடோவுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தொலைவில் இருந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்
மெலனி ஜோலி உட்பட பல கனடா அமைச்சரவை அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.