கரூர் விவசாயிகளே உங்களுக்கான வாய்ப்பு ஒன்றுபடுங்கள்
ஒரு தேசம் செழிக்க வேண்டும் என்றால் அந்த தேசத்தின் முதுகெலும்பான தொழில் முழுமை அடைய வேண்டும். தன்னிறைவு பெற வேண்டும். வெற்றி பெற வேண்டும,தேசத்தை வழிநடத்த அந்தத் தொழிலின் வளர்ச்சி என்பது அவசியமாகும்.
இந்தியாவின் தொழில் இந்தியாவின் முதுகெலும்பு தொழில் என்று சொன்னால் அது விவசாயம் ஆகும். இந்திய விவசாயத்திற்கு தன்னிறைவு தனித்தன்மை பாரம்பரியம் பகுத்து உண்ணுதல் ஆகியவை அதிகம் இருக்கின்றது.
இந்திய விவசாயத்தை காக்க வேண்டிய தருணம் இது. இந்திய விவசாயத்தில் புதுமைகள் புகுத்த வேண்டிய தருணம் இது. இந்திய விவசாயத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய நேரம் என்றால் அதற்கு சரியான நேரம் இதுவாகும். தற்பொழுதைய மாற்றங்கள் விவசாயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும்.
அந்த விவசாயத்தில் விவசாயிகள் முக்கிய பயன்களைப் பெற வேண்டும். அவர்களுக்கான லாபம் என்பது அதிகரிக்க வேண்டும். இந்தியா அதற்கு முழுமையாகத் தயாராக வேண்டும். அதற்கு அடித்தளமாகக் கரூர் மாவட்டத்தில் புதிய அஸ்த்திவாரம் ஒன்றை முன்னாள் ஐபிஎஸ் திரு.அண்ணாமலை குழு சார்ந்த தனார்வ தொண்டு நிறுவனமான வி தி லீடர்ஸ் பவுண்டேசன் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சியினை நாமும் பின்பற்றுவோம்.
அண்ணாமலை அவர்கள் அதற்கு அடித்தளமிட்டு கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சந்திப்பு உருவாக்கிச் சங்கத்தினை உருவாக்குவது குறித்து தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார். அதன்படி கரூர் விவசாயிகள் அனைவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்க வேண்டும்.
இந்த சந்திப்பானது கரூரில் இருக்கும் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து அவர்களது உற்பத்தியை எந்த ஒரு இடைத்தரகருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டி இந்தச் சந்திப்பானது கூட்டப்படுகிறது.
கரூரில் நீங்கள் விவசாயத்தில் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு சிறுகுறு நிலங்களில் பயிரிடுதல் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த சந்திப்பு உங்களுடைய ஒற்றுமையான சங்கத்தினை உருவாக்குவோம். இந்த சந்திப்பின் மூலம் கூட்டு முயற்சியில் உற்பத்தி விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து உங்களுக்கான லாபத்தினை உழைத்து பெறலாம், என்பதனை வலியுறுத்தும் தாக்கமாக இந்த விவசாயிகள் சங்கம் அமையுமென்று திருவண்ணாமலை ஐபிஎஸ் ஓய்வுபெற்றவர் தெரிவித்திருக்கின்றார்.
இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும். நமது வாழ்வில் முக்கியமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட வேண்டிய முக்கிய தொழில் ஒன்றாக விவசாயம் இருக்கின்றது. அதனை சரிசெய்யும் அந்த இளைஞர் குழு தயாராகிவிட்டது.
கரூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் சந்திப்பினை உறுதிப்படுத்துங்கள். விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கும் அந்த சங்கத்தின் மூலம் உங்களது உழைப்புக்கான நேரடி அங்கீகாரம் கிடைக்க பெறலாம். மேலும் ஒரு மாற்றுப்பாதையினை இது உருவாக்கும்.
இயற்கை வேளாண்மை எப்படி செய்ய வேண்டும். மேலும் மற்ற பல சந்தேகங்களை எப்படி தீர்த்துக் கொள்ளலாம் என்பது எல்லாத்துக்கும் இந்த கூட்டத்தில் விடை கிடைக்கும் என்று அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்துங்கள் விவசாயிகளே வாழ்த்துக்கள். இந்த தேசம் செழிக்கட்டும். விவசாயம் வளரட்டும். வந்தே மாதரம் என்போம்.