பரவும் காட்டுத் தீயால் கலிபோர்னியா நகர மக்கள் வெளியேற்றம்
கடந்த வெள்ளியன்று மத்திய கலிபோர்னியாவின் பிரஸ்ன பகுதியில் காட்டுத்தீ தொடங்கியுள்ளன என்ற தகவல் கிடைத்தது. அன்று முதல் மூன்று நாட்களில் 850 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தீவிரம் குறையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரணமான 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருவநிலையை கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. பிக் க்ரீக் பகுதியில் உள்ள கிராமத்தில் 30 வீடுகள் தீக்கிரை ஆகிய நிலையில் ஓர் ஆரம்பப் பள்ளி, தேவாலயம், ஸ்டோர் உள்ளிட்ட இடங்களுடன் மக்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
சனிக்கிழமை அன்று காட்டுத் தீ பரவிய பிரெஸ்னோ வடகிழக்கு பகுதியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் 207 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 14800 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதிக மக்கள் வாழும் இந்த மாகாணம் முழுவதும் 23 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தகுந்த பணியில் ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் மேற்கில் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை பரவி வருகின்றன. தொடரும் கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ தீயினால் நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.