ஆன்மிகம்ஆலோசனை

நிறம்மாறும் கணபதி அருள் பெறுவோம்

முதல் கடவுள்:

முழுமுதல் கடவுள் கணபதி அருள் என்பது அனைவருக்கும் அவசியம் ஆகும். குல தெய்வம் அருள் எவ்வாறு அனைவருக்கும் முக்கியமோ அது போல் விநாயகரின் அருள் அவசியம் ஆகின்றது. நம்முடைய ஒவ்வொரு தொடக்கத்திலும் வெற்றி நிலைக்க காரிய வெற்றிக்கு முதல் முதலில் நாம் வணங்க வேண்டியவர் கஜபதி விநாயகர் ஆவார்.

தமிழ் நாட்டில் உச்சி பிள்ளையார் கேரளாவில் நிறம் மாரும் பிள்ளையார்:

தமிழ் நாட்டில் உச்சி பிள்ளையார் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் வீதியிலும் விநாயகர் கோவில் நிறைந்து காணப்படுவது இயல்பாகும். அதுபோல் விநாயகருக்கு என்று கோவில்கள் வழிபாடுகள் நாடு முழுவதும் பறந்து விரிந்து காணப்படுகின்றது.

கஜபதி சிறப்பு :

யானை முகன் விநாயகர், வினைகளைப் போக்குபவர், காரியத்தடை அகற்றுபவர் அனைவருக்கும் முழு முதல் கடவுளாய் இருப்பவர் ஆவார். விநாயகர் வழிபாடுகளில் நாடு முழுவதும் வேறுபட்டு காணப்படுகின்றது. ஒவ்வொரு ஊரிலும் விநாயகருக்கு என்று சிறப்புத்தன்மை உண்டு. அரசமர பிள்ளையார். மஞ்சள் பிள்ளையார் என பல்வேறு வகைக்கள் கணபதிக்கு உண்டு.

கணங்களின் அதிபதி கணபதி:

கணங்களின் அதிபதி கணபதி ஒவ்வொரு ஊரிலும் சிறப்புடன் வழிபாட்டில் இருப்பார். கேரளாவில் தை முதல் ஆனி வரை 6 மாதம் வெள்ளை நிறத்துடனும், ஆடி முதல் மார்கழி வரை 6 மாதம் கருப்பு நிறத்துடனும் கலர் மாறும் அதிசய விநாயகர் இருக்கின்றார்.

கேரளா தக்கலை விநாயகர்

தக்கலை அருகே கேரளபுரம் என்ற ஊரில்தான் இந்த அதிசய விநாயகர் அவதரித்துள்ளார். அவருக்காக அழகிய ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

இங்குள்ள விநாயகரின் நிறத்தைப் பொறுத்து இந்த பிள்ளையார் அமர்ந்துள்ள அரசமரமும் நிறம்மாறுகிறதாம். இங்கு ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நடக்கும் அதிசயத்தை இங்கு வரும் பக்தர்கள் விநாயகரின் விளையாட்டு என்று கொள்கின்றனர். தற்போது ஒன்றரை அடி உயரம் உள்ள விநாயகர் ஆரம்பத்தில் அரை அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.

தக்கலை கணபதியை

பிரதிஷ்டை செய்தது திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா ஆவார். கணபதி சிலையை குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். நிறம் மாறும் விநாயகர் இவரை நிறம் மாறும் விநாயகர் என்றே அங்குள்ளவர்கள் அழைக்கின்றனர்.

கருப்பு வெள்ளை கணபதி

தை முதல் ஆனி வரை வெள்ளை நிறமாக விநாயகர் இருப்பார். ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலத்தில் கறுப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார்.

மேலும் படிக்க : நிலையான செல்வமும் பெற கிருத்திகை வழிபாடு.!

ஆடி மாதம் தொடங்கும்போது பிள்ளையாரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கும். இது உண்மையில் இன்றுவரை நிகழும் அரிய வகை நிகழ்வாகும். தை மாதம் தொடங்குகையில் மெல்ல மெல்ல பாதம் தொடங்கி கறுக்கத் தொடங்குகிறது. ஆறாம் மாதம் வரை வெள்ளை நிறம் அப்படியே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *