சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Bigboss 7 updates : பூர்ணிமாவின் காத்து பிராவோ பக்கம் திரும்பியது பிக்பாஸ் சீசன் 7 நடந்த அதிரடி திருப்பம்

விஜய் தொலைக்காட்சியில் ஆறு சீசன்களைக் கடந்து ஏழாவது சீசனில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் 7 சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 7 ஐம்பது நாட்களுக்கு முன்பு வரை சற்று போரடிக்கும் சீசனாக இருந்து வந்தது அனைவரின் வெறுப்பிற்கு பிக்பாஸ் சீசன் 7 ஆல் ஆனது இந்த டைம் இந்த சீசன் கண்டிப்பா சரியா ஓடாது என்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இவ்வாறு ரசிகர்களின் புலம்பல்களுக்கு ஆளான பிக்பாஸ் சீசன் 7ல் அதிரடியாக சில மாற்றங்களும் சூப்பரான என்ட்ரிகளும் பிக் பாஸ் ரசிகர்களை மீண்டும் கட்டி இழுத்தது. ஆம் திடீரென இந்த சீசனில் வைல்ட்கார்ட் என்ரியில் உள்ளே நுழைந்த அர்ச்சனா அனைவராலும் பேசும் பொருளாக மாறினார். பிக்பாஸ் சீசன் 1 இல் ஓவ்யா எவ்வளவு பிரபலமானாரோ அதே அளவிற்கு அர்ச்சனாவும் ஓட்டிங்கில் அதிக ரசிகர்களை சம்பாதித்தார். இவர் வந்ததற்கு பிறகு இந்த சீசன் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இவ்வாறு 50 சீசன்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸில் இந்த வாரம் பூர்ணிமா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரும் கண்டிப்பாக எலிமினேஷனில் சிக்குவார்கள் என கருத்துகள் பகிரப்பட்டு வந்தது. சமூக வலைத்தளங்களில் பூர்ணிமா இந்த வாரம் எலிமினேட் ஆகி விட்டார் என்ற செய்திகளும் வந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர் எப்படியோ பூர்ணிமா போனால் தான் இந்த சீசன் நல்லா இருக்கும் என சந்தோஷத்தில் குதித்து வந்தனர்.

கமல்ஹாசனும் இந்த வார ப்ரோமோவில் அனைவரும் மற்றவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தான் பார்க்கிறார்கள் ஆனால் தங்களுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை என்றும், இங்கு அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்கள் என்ன செய்தாலும் அது சரி என்று நினைக்கிறார்கள் அதேபோல் தங்களுக்கு பிடிக்காதவர்கள் என்ன நல்லது செய்தாலும் அது தவறு என்று நினைக்கிறார்கள் அதற்கு எல்லாம் இன்று இரவு ஒரு முடிவு பிறக்கும் என்று பேசியிருந்தார் ப்ரோமோவில் கமல்ஹாசன் கூறிய வார்த்தைகளை வைத்து கண்டிப்பாக பூர்ணிமா வெளியேறி விடுவார் என நினைத்தனர் ஆனால் சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பூர்ணிமா இந்த வாரம் எலிமினேஷனில் சிக்காமல் தப்பித்து விட்டார் அதற்கு பதிலாக இந்த வாரம் அக்ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் எலிமினேட் ஆகினர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல்ஹாசன் அடிக்கடி கூறும் வார்த்தை இந்த வாரம் நிஜமாகிவிட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இந்த வார எலிமினேஷன் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *