பிக்பாஸ் பிரபலம் : சூர்யா தயாரிப்பில் வெளியாகும் படம்
சூரியா தயாரிப்பில் 2டி எண்டர்டெயின்மெண்ட் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளார். ஜோக்கர் படம் ராஜுமுருகன் இயக்கத்தில் 2016இல் வெளியானது. இப்படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சினிமா வாய்ப்பு காத்துக் கொண்டிருந்த ரம்யா. விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து பைனல்லிஸ்ட் போட்டியாளர்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : நயன்தாரா சொல்லும் நச்சுனு நாலு டிப்ஸ்
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது சூர்யா தயாரிப்பில் 2டி என்டர்டெயின்மென்ட்டில் ஒப்பந்தமானார். அதிகாரப்பூர்வமான அறிவிப்பை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் உறுதி செய்தது.
மேலும் படிக்க : தண்ணிக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்ன கனெக்சன்????