மருத்துவம்

மூலிகையில் கற்பூர வெற்றிலை…!!!

மூலிகையில் முக்கிய இடம் பெற்ற வெற்றிலை. அனைத்து சுபகாரியத்திற்கும் பயன்படுவது மட்டும் இன்றி, மருத்துவம் வாய்ந்த பல நன்மையை பெற்றிப்பதாலே, இது முதன்மையாக இருக்கிறது என்றே சொல்லலாம். இதை சுண்ணாம்புடன் சேர்த்து சாப்பிட நம் நாக்கு சிவப்பதும், இதை உண்டதும் ஜீரணம் ஆகும் என்பதால், தான் அனைத்து விசேஷ வீடுகளில் வைக்கபடுகிறது. என்றும் அறிந்திருப்போம். இதன் நிறைய விஷேச குணங்களை பற்றி மேலும் பார்ப்போம்.

தலையில் நீர் கோர்த்து கொண்டு முகில் நீர் வடிதலுக்கு வெற்றலை சாறை மூக்கில் விட குணமாகும். வெற்றிலையில் ஆமனுக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்து கட்ட கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்ய வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, வெற்றிலை, தென் கலந்து சாப்பிட, நாளடைவில் ஆஸ்துமா குணமாகும். வயிற்று வலி, நீர் ஏற்றம், சீதள ரோகம், தலைவலி, சன்னி, மந்தம், உப்புசம், சரியாக கம்மாறு வெற்றிலை சாறு 15 மிலி அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க குணமாகும்.

பசியை தூண்ட

பிறந்த குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், வெற்றிலை காம்பை, விளக்கெண்ணெயில் நினைத்து ஆசன வாயில் வைக்க மலம் கழியும். அஜீரணத்தை போக்கி பசியை தூண்ட, வெற்றிலை மிளகு சேர்த்து கசாயம் செய்து கொடுத்து வரலாம். வெற்றிலையை அரைத்து கீழ் வாத வலிகளுக்கும்,வீக்கம், விதைப்பையில் ஏற்படும் வலி முதலியவைகளுக்கு வைத்து கட்ட, நல்ல பலன் தரும். அனலில் காட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போட மார்பு சளி குறையும்.

இருமல் கட்டுப்படும்

வெற்றிலை, இஞ்சி சேர்த்த சாறை பருக, நுரையீரல் சம்மந்தமான நோய்க்கு நிவாரணம் கிடைக்கும். வெற்றிலையில் கடுகு எண்ணெய் போட்டு சூடு செய்து மார்பில் கட்ட மூச்சு திணறல், இருமலுக்கு சுகம் தரும். வெற்றிலை நெருப்பில் வாட்டி அதனுடன் துளசி சேர்த்து சாறு எடுத்து பாத்து மாத குழந்தைக்கு தினமும் இரண்டு வேளை அரை ஸ்பூன் கொடுக்க சளி, இருமல் கட்டுப்படும். விளக்கெண்ணெயுடன், வெற்றிலை பசை சேர்த்து சூடு செய்து பற்று போட கீழ்வாதம் குணமாகும்.

மார்பு சளி

குழந்தைகளுக்கு சளி அதிகம் ஆகும் போது, இருமல், மூச்சு திணறல் ஏற்படும். இதற்கு வெற்றிலை நிவாரணியாகும். இரண்டு வெற்றிலை சாறு, தேன் சேர்த்து சாப்பிட நரம்பு பலப்படும். மூளையும் பலம் பெரும். ஒரு கடாயில் கடுகு எண்ணெய்யில் வெற்றிலையை வதக்கி, இளசூட்டுடன் நெஞ்சில் வைக்க மார்பு சளி கரையும். வாயுவை வெளியேற்ற கூடியது. வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட உடல் எடை குறையும். வாரம் மூன்று முறை தொடர்ந்து செய்யலாம்.

சாக்காடு, நரை, திரை, மூப்பை நீக்கி உடலை நோயின்றி காக்கும் கற்பக வெற்றிலை. பல நோய் தீர்க்கும் அற்புத மூலிகை, கால்சியம், இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. சாவிகால், ஆக்சாலிக் அமிலம், கெடினின், எக்ஸ்ட்ராகால், யூஜினால் போன்ற மருத்துவ குணங்களும் வெற்றிலையில் உள்ளன.

மேலும் படிக்க

காய்கறியில் இன்னொரு பூ வகை அது என்ன..???

டேஸ்ட் பண்ணுங்க கொஞ்சம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *