ஜம்மு-காஷ்மீரில் உருது செய்தித்தாள் மக்களுக்கு செய்த நன்மை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உள்ளூர் ஊடகங்களில் ஒன்றான ரோஷினி என்னும் செய்தித்தாள் நிறுவனம் உருது மொழிகளில் செய்தித்தாளை வெளியிடுகின்றன. ரோஷ்னி பெரிதாக ஜம்மு காஷ்மீர் மக்களிடம் விழிப்புணர்வை சேர்த்துள்ளது.
திங்கட்கிழமையன்று ஜம்மு காஷ்மீரில் உச்சத்தை தொட்டது கொரோனாவின் எண்ணிக்கை. அன்று ஒரே நாளில் 751 மக்களுக்கு புதிய கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்தில் 10 புதிய இழப்பு கணக்கிடும் அதிகரித்து மொத்தமாக 254 நபர்கள் இறந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் புது நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு நோயாளிகளின் இறப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் கூட பொது மக்கள் பாதுகாப்புகளை பின்பற்றாமல் இருப்பதுதான் மிகவும் அவலமான நிலையாக கருதப்படுகிறது.
இந்த அவல நிலையை மாற்ற அரசாங்கம் பல திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்களுக்கு அது சரிவர புரிகிறதா செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மருத்துவர்கள் செவிலியர்கள் போலீஸ் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் மற்ற அடிப்படை வசதி துறையினர் என அனைவரும் அவரவர் பணியை செம்மையாக செய்து பொதுமக்களுக்கு தகுந்த உதவி செய்வதை தலைவணங்கி பாராட்ட வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முக்கியமானதாக கருதப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் சென்றுள்ளது ரோஷ்னி செய்தித்தாள். இரண்டு ரூபாய் மதிப்புள்ள இந்த செய்தித்தாளில் செவ்வாய்க்கிழமையன்று இலவசமாக முகக்கவசத்தை ஒட்டி விற்பனை செய்துள்ளனர்.
இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும் செய்தித்தாளுடன் முகக்கவசம் இலவசமாக கிடைப்பது என்றால் சும்மாவா! இது பெரிதாக வரவேற்கப்பட்டு மக்களிடையே பேசப்படுகிறது.
கொரோனா பற்றிய விழிப்புணர்வு படமும் முகக்கவசத்தின் அவசியமும் விளக்கப்பட்டு செய்தித்தாள்கள் விற்கப்பட்டன. மற்ற துறையினர்களுடன் ஊடகங்களும் இணைந்து கொரோனாவை எதிர்க்கும் பணியில் செம்மையாக உதவுகிறது.
தமிழ்நாட்டில் இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் குமுதம் வார இதழுடன் முகக்கவசம் இலவசமாக தரப்பட்டது. அதோடு தமிழக அரசாங்கமும் நியாய விலை கடையில் குடும்ப அட்டைவாசிகளுக்கு முகக்கவசங்கள் இலவசமாக தரப்பட்டது. கொரோனாவிபமிருந்து எப்பொழுது விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை.