வரப்பிரசாதமா? காவியமா? என்னவா இருக்கும்..!!
விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக, நஞ்சில்லாத பஞ்ச காவியத்தை நாமே எளிதாக தயாரிக்க முடியும். இரசாயன பொருட்களுக்கு மாறாக, தாவரங்களுக்கு நோய் எதிப்பு சக்தியை தரக்கூடிய இயற்கை ஊட்டச்சத்து தான் பஞ்ச காவியம் ஆகும். உணவுப் பயிர்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை ரசாயன உரங்கள்.
இயற்கையாக கிடைக்கப்பெற்ற
பூச்சிக்கொல்லி மருந்துகளால் உண்டாகும், நச்சுத்தன்மை, இயற்கை கேடு, விளைவிப்பதோடு மனிதர்களின் மட்டுமன்றி, விலங்குகள், பறவைகள் ஆகியவை தீங்கு விளைவிக்கக் கூடியதாக ரசாயன பொருட்கள் திகழ்வதால், இந்த பேராபத்தில் இருந்து மீள்வதற்காக ஒரே ஒரு இயற்கையாக கிடைக்கப்பெற்ற பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர், வாழைப்பழம், பதநீர், நெய்யாகிய பொருட்களை முறையாக பயன்படுத்தி துளிகூட ரசாயன இல்லாமல் தயாரிக்கப்படும்.
கரைசலை பயிர்களுக்கு பயன்படுத்துவது தான் சிறந்தது. பஞ்சகவ்யத்தை அனைத்து பயிர்களுக்கும், இலைவழி உரம் தெளிப்பதால் சத்துக்கள் உண்ணுகிறார்கள். பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி மகசூலை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதனை ஏற்ற விலை பொருளாகவும் கிடைக்கின்றது. தயாரிப்பது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது.
வேளாண்மைத் துறையினர் வெளியிட்ட அறிக்கை
பஞ்சகவ்யம் தயாரிப்பது குறித்து வேளாண்மைத் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் உங்களுக்காக இதோ பசுவின் சாணம் நான்கு கிலோ, பசுவின் சிறுநீர் கோமியம் 2 லிட்டர், பசுவின் பால் ஒரு லிட்டர், தயிர் ஒரு லிட்டர், நெய் முக்கால் லிட்டர், கரும்புச்சாறு இரண்டு லிட்டர், இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 10, இருப்பின் ஒரு லிட்டர் கரும்புச்சாறு, கிடைக்கவில்லை என்றால் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையை 200 கிராம், 2 லிட்டர் நீரில் ஊற வைத்தால் 30 நிமிடங்களில் கிடைக்கும் கரைசலை பயன்படுத்தலாம்.
இவை அனைத்தும் தேவையான பொருட்கள் தயாரிக்கும் முறை நெய், சிறுநீர், சாணம், ஆகியவற்றை நன்கு கலந்து மூன்று நாட்களுக்கு அடிக்கடி கலக்கி வைக்க வேண்டும். நான்காம் நாள் இந்த கலவையுடன் இதர பொருட்களை தயிர், நெய், கரும்புச் சாறு, இளநீர், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். தினமும் இந்த கலவையை குறைந்தபட்சம் 4 தடவை கலக்கி 14 நாட்கள் வைத்திருந்து 19ஆம் நாள் பயிர்களில் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
பொருட்களில் உள்ள சத்துகள் பசும் சாணம் பாக்டீரியா பூஞ்சானம் நுண் சத்துக்களும் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்று தரும்.
வேப்பிலை, நொச்சி இலைகளைக் கொண்டு
பயிர்களுக்குப் பயன்படுத்தும் முறைகள் முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்வியம், 300 மில்லிகிராம் மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் அல்லது கைத்தெளிப்பான் அல்லது வேப்பிலை, நொச்சி இலைகளைக் கொண்டு, எல்லா பயிர்களுக்கும் இலைவழி உரமாக, காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கலாம்.
ஒரு ஏக்கரில் உள்ள பயிருக்கு ஒரு முறை தெளிப்பதற்கு 3 லிட்டர் பஞ்சகவ்யம் போதுமானதாகும். இந்த கரைசல் தெளிப்பானில் ஊற்றி பயன்படுத்த வேண்டும். எனில் வடிகட்டியும் விசைத் தெளிப்பான், வால்வு குழாயின் நுனிப்பகுதியை பெரிதாக்கியும் பயன்படுத்தினால், நல்ல முறையில் தெளிக்கலாம். நல்ல பலனும் கிடைக்கும். இதை வீட்டிலேயும் மாடித்தோட்டத்தில் வளர்ப்பவர்களும், இந்த முறையை பயன்படுத்தி பலன் பெறலாம்.